
2018 ஆம் ஆண்டில் இருந்து சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
மருத்துவ படிப்புக்கான நீட் தகுதித்தேர்வு நாடு முழுவதும் கடந்த 7-ந்தேதி நடைபெற்றது.
இதில், 11 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
நீட் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தேர்வில் முறைகேடு நடந்து விடக்கூடாது என்பதற்காக மாணவ-மாணவிகள் முழுமையாக சோதனை செய்த பின்பே அனுமதிக்கப்பட்டனர்.
கடும் எதிர்ப்பையும் மீறி நடத்தப்பட்ட இந்த நீட் தேர்வில் பல குளறுபடிகள் இருப்பதாகவும் எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்து விட வேண்டும் எனவும் மாணவ மாணவிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில் இருந்து சித்தா, யுனானி, ஆயுர்வேதம் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என மத்திய ஆயுஷ் இணையமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் யோகா, இயற்கை மருத்துவத்திற்கும் நீட் தேர்வு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.