மாட்டுக்கறி சாப்பிட்டா தப்பு இல்லையா.? ரன்பீர் ஆலியாபட்டை கோவிலுக்குள் விடாமல் விரட்டிய விஷ்ய இந்து பரிஷத்.

By Ezhilarasan Babu  |  First Published Sep 8, 2022, 12:23 PM IST

விஷ்வ இந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தின் எதிரொலியாக ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதியினர் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். ரன்பீர் கபூர் மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு இல்லை என கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது

.
 


விஷ்வ இந்து பரிஷத் பஜ்ரங் தள் அமைப்பினர் போராட்டத்தின் எதிரொலியாக ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதியினர் மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிச் சென்றனர். ரன்பீர் கபூர் மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு இல்லை என கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர்களுக்கு எதிராக இந்த போராட்டம் நேற்று நடைபெற்றது.

குறிப்பாக வடமாநிலங்களில் பசுவின் பெயராலும் மாட்டிறைச்சியின் பெயராலும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே இந்து  அமைப்புகள், சங்பரிவார்கள் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல் மாட்டிறைச்சிக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் அவர்களால் குறிவைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மாட்டிறைச்சி சாப்பிடுவது தவறு இல்லை என சமீபத்தில் கருத்து கூறியிருந்தார், அதேபோல் அவரது மனைவி ஆலியா பட்டும் கணவரைப் போலவே மதவெறிக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

Tap to resize

Latest Videos

இந்நிலையில்தான் ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதியர் பிரம்மாஸ்திரம் என்ற திரைப்படத்தை நடித்துள்ளனர், இத் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது, முன்னதாக திரைப்படத்தின் இயக்குனர் அயன் முகர்ஜி, ரன்பீர் கபூர், ஆலியா பட் தம்பதியர் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டனர். புகழ்பெற்ற ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆலியா பட் தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்த தகவலை வெளியிட்டார், பிரம்மாஸ்திரம் படக்குழுவினருடன்  மகாகாலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம்  செய்ய உள்ளோம் என கூறியிருந்தார்.

இதையும் படியுங்கள்: amit shah security: அமித் ஷா பாதுகாப்பில் அத்துமீறல்: மும்பையில் ஒருவர் கைது: போலீஸார் விசாரணை

இதைக் கேள்விப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மாட்டிறைச்சி ஆதரவாகப் பேசிய ரன்பீர் கபூர் மற்றும் இந்துக்களுக்கு எதிரான மனநிலைக் கொண்ட ஆலியா பட் தம்பதியினர் கோவிலுக்கு வருவதை அனுமதிக்க மாட்டோம், அவர்கள் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் விஐபி நுழைவாயில் ஏராளமான விஎச்பி மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் கருப்பு கொடியுடன் திரண்டு ரன்பீர் ஆலியா பட் தம்பதிக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் கோவில் வளாகத்தை சுற்றிலும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் அங்கு பதற்றம் அதிகரித்ததால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

ஆனால் இத்தகவல் அறிந்த ஆலியா பட்- ரன்பீர் கபூர் மற்றும் தயாரிப்பாளர் அயன் முகர்ஜி ஆகியோர் உஜ்ஜயினி கோவிலுக்கு வருவதைத் தவிர்த்தனர், பின்னர் அவர்கள் அங்கிருந்து இந்தூர் திரும்பினர், பிறகு இந்தூரில் இருந்து விமானத்தில் மும்பை புறப்பட்டனர். இதனையடுத்து உஜ்ஜயினி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் மகாகாலேஸ்வரர் கோவிலில் நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து படத்தின் தயாரிப்பாளர் அஜய் முகர்ஜி மட்டும் சாமி தரிசனம் செய்தார் என கூறினார்.

இதையும் படியுங்கள்: 50ஆயிரம் தொண்டர்களின் உற்சாகத்தில் ராகுல் காந்தி...! 2நாள் இந்தியா ஒற்றுமை பயணத்தில் பொதுமக்களுடன் சந்திப்பு

மேலும் இது குறித்து இந்து அமைப்பினர் கூறுகையில் ரன்பீர் கபூர் மாட்டுக்கறி சாப்பிடுவது தவறு இல்லை என பேசினார், ஆலியா பட் இந்துக்களுக்கு எதிரானவர், எனவே அவர்கள் கோவிலுக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை, இது ஒன்றும் டூரிஸ்ட்  ஸ்பாட் அல்ல என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 
 

click me!