உலகில் ஏழு பேர் ஒரே உருவத்தில் இருப்பாங்கன்னு சொல்வது உண்மையோ.. வடஇந்தியாவில் இரண்டு கெஜ்ரிவால்.!

Published : Oct 15, 2021, 09:31 PM IST
உலகில் ஏழு பேர் ஒரே உருவத்தில் இருப்பாங்கன்னு சொல்வது உண்மையோ.. வடஇந்தியாவில் இரண்டு கெஜ்ரிவால்.!

சுருக்கம்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சாயலில் இருக்கும் காணொலி இணையத்தில் வைரலாகி உள்ளது.  

மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் உணவு கடை வைத்திருக்கும் ஒருவரை, யார் பார்த்தாலும் ஒரு நிமிடம் நின்றுவிடுகிறார்கள்.  உற்று நோக்கி பார்த்துவிட்டு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இங்க என்ன செய்கிறார் என்று தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார். பார்ப்பதற்கு அச்சு அசல் அரவிந்த் கெஜ்ரிவால் போலவே இருக்கிறார் அந்தக் கடைக்காரர். இவரைப் பற்றிய காணொலி யூடியூபிலும் வெளியான நிலையில், தற்போது வட மாநிலத்தில் புகழ்பெற்றுவிட்டார். அவருடைய காணொலியைக் கண்டு லைக்குகளும் கமெண்ட்டுகளும் கண்டப்படி எகிறிக்கொண்டிருக்கின்றன. 
இதுதொடர்பாக விழுந்த பதிவில், ‘நீங்கள் அரவிந்த் கெஜ்ரிவால் போல இருக்கிறீர்கள்’, ‘குளிர்காலத்தில் மஃப்ளர் அணிந்தால் அப்படியே கெஜ்ரிவால்தான்’ என்று பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள். இந்தக் காணொலி மூலமாக, டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால், இவரை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். உலகில் 7 பேர் ஒரே உருவத்தில் இருப்பார்கள் என்று கூறப்படுவதுண்டு. அது உண்மைதானோ என்று கூறும் அளவுக்கு இந்தக் காணொலி இணையத்தில் வைரலாகியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

உலக சாதனையுடன் களமிறங்கும் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்: ரயில்வே வாரியம் அதிரடி ஒப்புதல்!
75+ Happy Eid Ul-Adha Wishes in Tamil: குடும்பம், நண்பர்கள் என அனைவருக்கும் மனம் கவரும் வாழ்த்துகள்