
பிரதமர் நரேந்திர மோடியின், ‘தூய்மை இந்தியா’(ஸ்வாச் பாரத்) திட்டத்தை வலியுறுத்தும் வகையில் வரவுள்ள ‘டாய்ெலட்’ திரைப்படத்தில் மோடியாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் அக்ஷய் குமார். இவர் அடுத்து நடிக்கும் படம் ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’ ஆகும். இந்த திரைப்படம் பிரதமர் மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட உள்ளது.
இந்த திரைப்படத்தின் டிரைலரை பிரதமர் மோடியிடம் நடிகர் அக்ஷய்குமார்திரையிட்டு காண்பித்துள்ளார். அப்போது அதைப் பார்த்த பிரதமர் மோடி அதை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்த திரைப்படம் வௌியானால், மத்திய அரசின், பிரதமர் மோடியின் தீவிர பிரசாரமான தூய்மை இந்தியா திட்டம் நாடுமுழுவதும் பரவலாக கொண்டு செல்லப்பட்டு, விழிப்புணர்வு ஏற்படும் என நம்பப்படுகிறது. இந்த படம் ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகையில், “ பிரதமர் மோடியாக, நடிக்கும் அக்ஷய் குமாரால் மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்’’ எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், பா.ஜனதா எம்.பி. சத்ருகன் சின்ஹா கூறுகையில்,“ பிரதமர் மோடியாக நடிக்க, நடிகர் அக்ஷய் குமார் தான் சரியான தேர்வாக இருக்கும். அவரின் பொதுவாழ்க்கையில் தூய்மையான தோற்றம், நாட்டின் தோற்றத்தோடு சிறப்பாக பொருந்தும்’’ என்றார்.
இதற்கிடையே மத்திய திரைப்பட சான்று அளிக்கும் நிறுவனத்தின் தலைவர்பஹாஜ் நிஹால்னி கூறுகையில், “ பிரதமர் மோடியாக நடிக்க நடிகர் அக்ஷய் குமாரைத் தவிர்த்து யாரையும் நான் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. அவரின் தோற்றம், சிந்தனை, பார்வை, அவர் பொதுவாழ்வில் செய்யும் செயல்கள் சிறப்பானவராகக் காட்டுகிறது’’ என்றார்.