
மணிப்பூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஐரோம் ஷர்மிளா, மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற புதிய பிராந்திய கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்தை எதிர்த்து, 16 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து பிரபலமானவர் ஐரோம் ஷர்மிளா.
தற்போது அவர், மக்கள் எழுச்சி மற்றும் நீதிக் கூட்டணி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். அடுத்த ஆண்டு மணிப்பூர் சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் தான் போட்டியிடப் போவதாகவும் அவர் தெரிவித்தார். புதிய கட்சியின் மூலம், கடுமையான சட்டங்கள் அமலில் உள்ள மணிப்பூர் மாநிலத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.