
ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 புதிய புனல்மின் திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
ஹிமாச்சலப்பிரதேச மாநிலம் மாண்டியில், புதிய புனல்மின் நிலைய திட்டங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிரதமர் திரு. நரேந்திர மோடி, 800 மொகாவாட் திறன் கொண்ட Koldam, 520 மெகாவாட் திறன்கொண்ட Parbati மற்றும் சுமார் 420 மெகாவாட் திறன் கொண்ட Rampur ஆகிய புனல்மின் நிலைய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த 3 ஆண்டுகளில் ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு விடும் எனக் கூறினார். போர் நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலை பெருமைப்படுத்திப் பேசும் பல நாடுகள், காஷ்மீரில் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக் தாக்குதலுக்குப் பிறகு, நமது ராணுவத்தைப் பற்றியே பேசுவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.