
மணிப்பூர் முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்ட இரும்பு பெண் இரோம் சர்மிளா வெறும் 90 வாக்குகள்மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார்.
மணிப்பூரில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மணிப்பூர் சிறப்பு ஆயுதப்படைச் சட்டத்தை எதிர்த்து
உண்ணாவிரதபோராட்டம் நடத்தியவர் 44 வயதான இரோம் சர்மிளா. மணிப்பூரில் நடந்த 60 தொகுதிகளுக்கான
சட்டப்பேரவைத்தேர்தலில் மக்கள் எழுச்சி மற்றும் நீதிக்கூட்டணி என்ற கட்சி தொடங்கி போட்டியிட்டார்.
கடந்த 15 ஆண்டுகளாக மணிப்பூர் பெண்களுக்காக போராட்டம் நடத்தியதால், நிச்சயம் தனக்கு
மக்களின் ஆதரவுஇருக்கும் எனக் கருதி நம்பிக்கையுடன், சர்மிளா தேர்தலில் போட்டியிட்டார்.
அதிலும் முதல்வர் ஓக்ராம் இபோபி சிங்கின் தொபால் தொகுதியில் அவரை எதிர்த்து சர்மிளா களம்கண்டார்.
ஆனால், தேர்தல் முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், சர்மிளா வெறும்
90 வாக்குகள்மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளார். முதல்வர் இபோபி சிங் 18,649
வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 143பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர்.
இந்த தோல்வி குறித்து இரோம் சர்மிளா கூறுகையில்,
“ இந்த தேர்தல் தோல்வியை நினைத்து நான்வருத்தப்படவில்லை. இது மக்களின் மனநிலையின் வெளிப்பாடு.
இதனால், நான் பாதிக்கப்படவும் போவதில்லை.ஏனென்றால், மக்கள் மனநிலை மாறிக்கொண்டே இருக்கும்.
சில கட்சிகளால் பணபலமும்,ஆட்கள் பலமும்வெளிப்படையாக பயன்படுத்தப்பட்டது தெரிந்த்து தான்” என்றார்.