சபாஷ்…..புதிய சாதனையை நோக்கி இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி

Published : Feb 28, 2020, 05:31 PM IST
சபாஷ்…..புதிய சாதனையை நோக்கி இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி

சுருக்கம்

மிக குறுகிய காலத்தில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் (ஐபிபிபி) வாடிக்கையாளா்களின் எண்ணிக்கை 2 கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளா் எண்ணிக்கை ஒரு கோடி என்ற மைல்கல்லை கடந்த நிலையில் அடுத்த 5 மாதங்களில்  வாடிக்கையாளா் எண்ணிக்கை அடுத்த ஒரு கோடியைத் எட்டி சாதனை படைத்துள்ளது.அதன்படி, ஒரு காலாண்டுக்கு 33 லட்சம் புதிய கணக்குகள் என்ற அடிப்படையில் வங்கி தொடங்கி 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் கூறுகையில், “ அனைவருக்கும் நிதி சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற அரசின் நல்ல நோக்கத்தின் அடிப்படையில் ஐபிபிபி உருவாக்கப்பட்டது. அவா்களின் பங்களிப்பால் தற்போது இந்த வெற்றி கிடைத்துள்ளது. 1.36 லட்சத்துக்கும் மேற்பட்ட தபால் அலுவலகங்கள் மற்றும் 1.9 லட்சம் தபால் பணியாளா்களுடன் தொடங்கப்பட்ட ஐபிபிபி-யின் ஆதார் அடிப்படையிலான சேவை வாடிக்கையாளா்களின் இல்லங்களைச் சென்றடைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!