ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: பிகார் சட்டப்பேரவயில் தீர்மானம்

Published : Feb 28, 2020, 02:57 PM IST
ஜாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: பிகார் சட்டப்பேரவயில் தீர்மானம்

சுருக்கம்

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக நடத்தப்பட வேண்டும் என்று பிகார் சட்டப்பேரவையில்நேற்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது  

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிகார்  சபாநாயகர் விஜய் குமார் சவுத்ரி,  பிகாரில் 2021-ம் ஆண்டு நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதிவாரியாக அமைய வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்மொழிந்தார்.கடந்த செவ்வாய்க்கிழமை அன்று குடியுரிமை திருத்த சட்டம் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள்தொகை பதிவேடு தொடர்பாக விவாதம் நடந்தது. என்ஆர்சியை கைவிடக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்பொழுது நடந்த விவாதத்தின்போது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற முதல்வர் நிதிஷ்குமார் கருத்து உடனடியாக ஏற்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று தீர்மானம் நிறைவேறியது.கடந்த 1931ம் ஆண்டு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது..

அதற்குப்பிறகு ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி இதேபோன்ற தீர்மானம் நிறைவேறியது .அந்த தீர்மானத்தை நினைவுபடுத்தும் வகையில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

வீர் சாவர்க்கர் பெயரில் சர்வதேச விருது.. ஏற்க மறுத்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்!
பிரதமர் மோடி இதயங்களை ஹேக் செய்பவர்! மக்களவையில் தாறுமாறாக புகழ்ந்த கங்கனா ரணாவத்!