
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு விவரங்களை மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய நிதித் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேஹ்வால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், இந்த செலவின விவரங்களை தெரிவித்துள்ளார்.
செலவின விவரங்கள்
பழைய நோட்டு
ஒரு ரூ.500 நோட்டை அச்சடிக்க 3.09 காசு
ஒரு ரூ.1000 நோட்டை அச்சடிக்க 3.17 காசு
செலவின விவரங்கள்
புதிய நோட்டு
ஒரு ரூ. 500 நோட்டை அச்சடிக்க 3.09 காசு
ஒரு ரூ. 2000 நோட்டை அச்சடிக்க 3.77 காசு
எழுத்துப்பூர்வ விளக்கம்
“தற்போது வரை ருபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு வருவதால் மொத்தம் எத்தனை நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன என்ற விபரங்களை தற்போது கூற முடியாது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான காகிதங்கள் அரசுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்படுகின்றன.புதிதாக நிறுவனங்கள் ஏதும் நியமிக்கப்படப்வில்லை.”
“மத்திய அரசைத் தவிர்த்து வேறு எந்த நிறுவனங்ளுக்கும் ரூபாய் நோட்டு அச்சடிப்பதற்கான தாள்களை விற்பனை செய்யக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.”