இஸ்லாமிய பாடகிக்கு பொது நிகழ்ச்சிகளில் பாட தடை… மத குருமார்கள் நடவடிக்கையால் பரபரப்பு…

 
Published : Mar 16, 2017, 09:34 AM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
இஸ்லாமிய பாடகிக்கு பொது நிகழ்ச்சிகளில் பாட தடை… மத குருமார்கள் நடவடிக்கையால் பரபரப்பு…

சுருக்கம்

Singer Nahit afrin

இஸ்லாமிய பாடகிக்கு பொது நிகழ்ச்சிகளில் பாட தடை… மத குருமார்கள் நடவடிக்கையால் பரபரப்பு…

நகித் அப்ரின் என்ற பாடகி பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி இசை ஷோவில் கலந்துக்கொண்டு இரண்டாவதாக பரிசு பெற்றவர்.

இஸ்லாமிய பெண்ணான இவர் தனது ரியாலிட்டி ஷோவில் கிடைத்த புகழினால் நம்ம ஊர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய பாலிவுட் திரைப்படமான அகிராவில் தனது முதல் பாடலை பாடினார்.

 இது தவிர  பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொண்டு பாடி வருகிறார்.

இந்நிலையில், இம்மாதம் 25ஆம் தேதி அஸ்ஸாமில் நடைபெறும் பொது நிகழ்ச்சி ஒன்றில் பாட நகித் அப்ரின் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இந்நிகழ்ச்சியில் நகித் அப்ரின் பாடக்கூடாது என முஸ்லிம் மத குருமார்கள் தடை விதித்துள்ளனர்.

42 மத குருமார்கள் விதித்துள்ள இந்தத் தடையில், பொது நிகழ்ச்சியில் நகித் அப்ரின் இனி பாடக் கூடாது என்றும், இது போன்று நிகழ்ச்சியில் பங்கேற்பதை அவர் நிறுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள  அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் சர்பானந்த சோனோவல், நாடு முழுவதும் அப்பெண்களுக்கு ஆதரவான நிலை உள்ளது என்று தெரிவித்தார்.

நகித் அப்ரின் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் பாடகிக்கு எந்தத் தீங்கும் விளைவிக்க அனுமதிக்க மாட்டேன். என்றும்  சர்பானந்த சோனோவல் கூறினார்.

இந்த தடை குறித்து பேசிய நகித், “இந்தத் தடை என்னை மனதளவில் அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்றும்  இதனால் மனதளவில் உடைந்து போனாலும் இசை உலகை விட்டு வெளியேற மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

 

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!