“திருப்பதி கோவிலிலும் ‘ஸ்வைப்’ முறை” – பக்தர்கள் மகிழ்ச்சி

First Published Nov 22, 2016, 11:29 AM IST
Highlights


புழக்கத்தில் இருந்த பழைய 5௦௦ மற்றும் 1௦௦௦ ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததையடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இதனால், அன்றாட தேவைகளுக்கும் போதிய பணம் இன்றி பொதுமக்கள், விவசாயிகள், சிறு குறு வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமும் குறைந்தது.

இதனால், தேவஸ்தானம் வாடகை அறை பெறும் இடம் லட்டு டோக்கன் பெறும் இடம் என பக்தர்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் ஸ்வைப் இயந்திரத்தை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பணம் தட்டுப்பாடாக இருக்கும் இந்த நேரத்தில் ஸ்வைப் முறையை அறிமுகப்படுத்தியதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

click me!