
புதுவை நெல்லித்தோப்பு சட்டமன்ற இடை தேர்தலில் முதல்வர் நாராயணசாமி 11,159 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுவை நெல்லித்தோப்பு சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் ஆகியோர் போட்டியிட்டனர்.
கடந்த 19ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை தற்போது எண்ணப்பட்டது. இந்த தேர்தலில் பல்வேறு பூசல்களையும், குழிப்பறிகளையும் சந்தித்து தேர்தல் களத்தில் இறங்கி முதல்வர் நாராயணசாமி, 3வது சுற்றில் 18,709 வாக்குகள் பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் 7526 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.
தனது வெற்றியை உறுதி செய்த நாராயணசாமி, காங்கிரஸ் தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடினார். இதையொட்டி காங்கிரஸ் அலுவலகங்களிலும், பல்வேறு பகுதிகளிலும் காங்கிரசார், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்கின்றனர்.