
நெல்லித்தோப்பு இடை தேர்தலில் நாராயணசாமி முதல் சுற்றில் 4000 வாக்குகள் வித்தியாசத்திலும், 2வது சுற்றில் 7537 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார்.
32ஆயிரம் வாக்குகள் உள்ள இந்த தொகுதியில், இன்னும் ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்துவிடும். அதிக வாக்கு வித்தியாசத்தில் நாராயணசாமி முன்னிலையில் இருப்பதால், அவரது வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது.
அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பின் தங்கியுள்ளார். புதுச்சேரி நாராயணசாமி வீடு மற்றும் காங்கிரஸ் அலுவலகங்களில்கொண்டாட்டம் கலைகட்டுகிறது. சொல்லி கில்லி அடித்துவிட்டார் நாராயணசாமி.
காங்கிரஸ் தலைமை இவரை பல விஷயங்களில் ஏன் நம்புகிறது என்பது இப்போது தான் தெரிகிறது. எத்தனை போட்டிகள், எத்தனை குழிப்பறிகள். அத்தனையும் அசால்ட்டாக ஊதி தள்ளிவிட்டார் நாராயணசாமி