
1. டெல்லி செங்கோட்டைக்கு காலை 7.23 மணிக்கு பிரதமர் மோடியின் பாதுகாப்பு படையின் வாகனங்கள் வந்தவுடன் அங்கு குழுமி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
2. செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்ற வந்த பிரதமர் மோடி, அவரின் டிரேட்மார்க் உடையான அரைக் கை குர்தா, தலையில் டர்பன் அணிந்திருந்தார்.
3. பிரதமர் மோடி கருப்பு நிற ரேஞ்ச்ரோவர் காரில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்து சேர்தார். அவரை பாதுகாப்பு துறை அமைச்சர் அருண் ஜெட்லி, இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே, பாதுகாப்பு செயலாளர் சஞ்சய் மித்ரா ஆகியோர் வரவேற்றனர்.
4. பிரதமர் மோடிக்கு , பாதுகாப்பு துறை செயலாளர் ஜி.ஓ.சி. அதிகாரிகளை அறிமுகப்படுத்திவைத்தார். அதன்பின், ஜி.ஓ.சி. அதிகாரிகளுடன், அணி வகுப்பு பேரணி நடத்தும் இடத்துக்கு சென்றார்.
5. ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் டெல்லி போலீசார் ஆகிய பிரிவுகளில் இருந்து ஒரு அதிகாரி வீதம் 24 அதிகாரிகளை மோடி பார்வையிட்டார்.
6. செங்கோட்டையில் உள்ள தேசியக் கொடியின் கம்பம் அமைக்கப்பட்ட பகுதிக்கு சரியாக 7.30 மணிக்கு நடந்து சென்ற மோடி, தேசியக் கொடியை ஏற்றினார்.
7. இந்த ஆண்டு பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் பாரம்பரிய முறையில் மாற்றம் செய்யப்பட்டு, ஜி.ஓ.சி. அதிகாரிகள் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்தனர்.
8.தேசியக் கொடி ஏற்றப்பட்டவுடன், 21 துப்பாக்கிகள் சுடப்பட்டு, 2281 ரெஜிமென்ட் படைகள் வானத்தை நோக்கி சுட்டு மரியாதை செலுத்தினார்ள்.
9. விமானப்படையின் பேண்டுவாத்தியங்கள் தேசியக் கீதத்தை இசைத்து, மரியாதை செலுத்தினர்.
10. பிரதமர் மோடி இந்த ஆண்டு தனது சுதந்திரதின உரையை 57 நிமிடங்களாக குறைத்துக் கொண்டார். தொடர்ந்து 4-வது ஆண்டாக, திறந்தவௌியில், குண்டுதுளைக்காத கண்ணாடி கூண்டில் இல்லாமல், சாதாரண கண்ணாடி கூண்டில் இருந்து மோடி பேசினார்.
12. சுதந்திர தின நிகழ்ச்சிக்கு முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், எச்.டி. தேவே கவுடா, மக்களவை சபாநாயகர் சுமத்ரா மகாஜன், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பா.ஜனதாதேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.