
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் பல பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கிடையில், ஷா ரஷித் அகமது குவாட்ரிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நாட்டின் பல பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளார். இதற்கிடையில், ஷா ரஷித் அகமது குவாட்ரிக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இதற்காக பிரதமர் மோடிக்கு ஷா ரஷித் அகமது குவாட்ரிக் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது இந்த விருதை எதிர்பார்த்தேன். அப்போது, பாஜக ஆட்சியின் மீது நம்பிக்கை விட்டுபோனது. ஆனால் நான் நினைத்தது தவறு என்று நீங்கள் நிரூபித்துவிட்டீர்கள் என்றார். இதை கேட்ட பிரதமர் மோடி, சிரித்துக்கொண்டே சென்றார்.
இதையும் படிங்க: ஏப்.8 தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி... முதுமலையில் பொம்மன் - பெள்ளி தம்பதியை சந்தித்து பாராட்ட உள்ளதாக தகவல்!
பத்மஸ்ரீ வென்றவர்களின் கருத்து:
பத்மஸ்ரீ விருது வழங்கியதற்காக இந்திய அரசுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், ஏனெனில் முன்னர் பத்மஸ்ரீ விருது வழங்கும் முறை வேறுபட்டது, ஆனால் இன்று ஆராய்ச்சி செய்யப்பட்டு இன்று புதியவர்களைக் கண்டுபிடித்து முன்னுக்கு கொண்டு வருகிறது. மேலும் பத்மஸ்ரீ விருது பெற்ற சுஜாதா ராமதுரை, இந்த விருதை படிக்க விரும்பி சிரமப்படும் பெண்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: எஸ்.பி.ஐ வங்கியில் வேலைவாய்ப்பு... ரூ.41,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
பத்மஸ்ரீ பெற்ற முலாயம் சிங் யாதவ்:
ஆஸ்கர் விருது பெற்ற நாடு நாடு என்ற பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளார். மறைந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்முவால் பத்ம விபூஷன் (மரணத்திற்கு பின்) வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மகனும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் பெற்றுள்ளார்.