பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் எஸ்கேப்..ஆத்திரத்தில் ஈவு இரக்கமில்லாமல் மகளை கழுத்தை அறுத்து கொன்ற பெற்றோர்

Published : May 28, 2022, 02:54 PM ISTUpdated : May 28, 2022, 02:56 PM IST
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலனுடன் எஸ்கேப்..ஆத்திரத்தில் ஈவு இரக்கமில்லாமல் மகளை கழுத்தை அறுத்து கொன்ற பெற்றோர்

சுருக்கம்

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் நாகல் குண்டா கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தேவதாசின் இளைய மகள்‌ ராஜேஸ்வரி (20). அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். 

பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு சாதி பையனுடன் சென்றதால் ஆத்திரமடைந்த பெற்றோர் பெற்ற மகளையே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் நாகல் குண்டா கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி சாவித்திரிபாய். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தேவதாசின் இளைய மகள்‌ ராஜேஸ்வரி (20). அதே பகுதியை சேர்ந்த வேறு சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஸ்வரி திடீரென வீட்டில் இருந்து மாயமாகினார். பல்வேறு இடங்களில் தேடியும் ராஜேஸ்வரி கிடைக்காததால் காதலருடன் சென்றது பெற்றோருக்கு தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன காதலர் இருவரையும் காவல்  நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து ராஜேஸ்வரியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து, காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுநாள் காலையில் ராஜேஸ்வரி கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியுள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜேஸ்வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த அறிக்கையில் ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IndiGo பயணிகளுக்கு ஷாக் கொடுத்த CEO.. இன்னும் 10 நாளைக்கு இது தான் கண்டிஷன்..!
Bus fares: விமானத்தில் மட்டுல்ல இனி பேருந்திலும் போக முடியாது போல.! பிளைட் டிக்கெட் ரேட்டிற்கு உயர்ந்த பேருந்து கட்டணம்.!