டெஸ்ட் மேட்ச் 5 நாள், இன்று மூன்றாவது நாள் தான்... சி.பி.ஐ. விசாரணை பற்றி கூலாக பதிலளித்த கார்த்தி சிதம்பரம்!

By Kevin KaarkiFirst Published May 28, 2022, 2:30 PM IST
Highlights

சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு, 2011-ம் ஆண்டு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜரான கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கார்தி சிதம்பரம், “டெஸ்ட் மேட்ச் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். இன்று தான் மூன்றாவது நாள்,” என தெரிவித்தார். மூன்றாவது நாள் விசாரணையை கார்த்தி சிதம்பரம் இவ்வாறு குறிப்பிட்டு இருக்கிறார். 

“நான் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிசம் எழுதி இருக்கிறேன். அரசுடன் இணைந்து விசாரணை அமைப்புகள் என்னையும், என் குடும்பத்தையும் குறி வைத்து மவுனமாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்மீது புனையப்பட்டு இருக்கும் இந்த வழக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அவையின் உரிமையை மீறிய ஒரு செயல்.” 

“நாடாளுமன்ற உறுப்பினராக என்னுடைய நடவடிக்கையில் சி.பி.ஐ. குறுக்கீடு செய்வது ஜனநாயக நடைமுறைகள் மீதான நேரடி தாக்குதல். எனவே, இந்த விவகாரத்தில் முகாந்தரம் எடுத்துக்கொண்டு நாடாளுமன்ற உரிமை மீறல் தொடர்பான நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்,” என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளேன்.

குற்றச்சாட்டு:

எனது கடிதம் குறித்து சபாநாயகர் முடிவுக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன். சீன நாட்டைச் சேர்ந்த 263 பேருக்கு, 2011-ம் ஆண்டு முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விசாக்களை வழங்க ரூ. 50 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக கார்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டிஉள்ளது. கார்த்தி சிதம்பரம் மீது மே 14 ஆம் தேதி சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. சி.பி.ஐ. மட்டும் இன்றி அமலாக்கத் துறை சார்பிலும் கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. 

click me!