சிலிண்டர் வெடித்து விபத்து.. அதிகாலை தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

Published : May 28, 2022, 11:39 AM IST
சிலிண்டர் வெடித்து விபத்து.. அதிகாலை தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு..!

சுருக்கம்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடித்தது. 

ஆந்திராவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிகாலையில் தூங்கி கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் முலக்கலேது கிராமத்தை சேர்ந்தவர் ஜானி பாய். இவர் தனது வீட்டில் அவருடைய மகன், மருமகள், பேரன் ஆகியோருடன் வழக்கம்போல் தூங்கி கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை வீட்டின் சமையலறையில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் திடீரென்று வெடித்தது. 

இந்த விபத்தில் வீடு கடும் சேதம் அடைந்த நிலையில் அங்கு தூங்கி கொண்டிருந்த ஜானி பாய்(60), பாபு (35), ஷர்புனா (30), பைரோஜ் (6) ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தில் அருகில் உள்ள இரண்டு வீடுகளும் சேதமடைந்ததில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

மலை போல் குவிந்த எஸ்.ஐ.ஆர். வழக்குகள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருத்தப்பட்ட வந்தே மாதரம் தான் தேசப் பிரிவினைக்கு காரணமா? அமித் ஷா பேச்சால் சர்ச்சை