விடைபெற்றது ஐ.என்.எஸ். விராட் - முக்கிய அம்சங்களைத் தெரிந்து கொள்வோம்….

 
Published : Mar 06, 2017, 04:08 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
விடைபெற்றது ஐ.என்.எஸ். விராட்  - முக்கிய அம்சங்களைத் தெரிந்து கொள்வோம்….

சுருக்கம்

The worlds oldest Indias 2nd aircraft carrier INS turbine

* உலகின் மிகப்பழமையானதும், இந்தியாவின் 2-வது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விராட் தனது 57 ஆண்டுகால சேவையை முடித்து நேற்றுடன் ஓய்வு பெற்றது.

* 1959ம் ஆண்டு நவம்பர் 19-ந்தேதி  இங்கிலாந்து அரசின் கப்பல் படையில் எச்.எம்.எஸ். ஹெர்ம்ஸ் என்ற பெயரில் சேர்க்கப்பட்டது

*  இந்த கப்பல் அந்த நாட்டுக்கு 25 ஆண்டு காலம் சேவையாற்றி கடந்த 1984ம் ஆண்டு ஓய்வு பெற்றது. 

* அதன்பின், கடந்த 1987ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து 46.5 கோடி டாலருக்கு (ரூ.3,102 கோடி)இந்திய அரசால் வாங்கப்பட்டு, ஐ.என்.எஸ். விராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* உலகின் மிகச்சிறந்த விமானம் தாங்கி கப்பலில் ஒன்றாக கருதப்படும் ஐ.என்.எஸ். விராட், 23 ஆயிரத்து 900 டன் எடையும், 226 மீட்டர் நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்டது.

* இறுதியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையில் இருந்து கொச்சிக்கு பயணம் செய்தது. அதன்பின் அங்கிருந்து மும்பையில் கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஐ.என்.எஸ். விராட் இன்றுடன் ஓய்வு பெற்றது.

* மும்பை கடற்படை தளத்தில் நடந்த பரிவு உபசார விழாவில் வீராட் கப்பலின் கமாண்டர்களாக பணிபுரிந்த 22 பேரில் 21 பேர் பங்கேற்றனர். அவர்கள் உணர்ச்சி பொங்க வீராட் போர்க்கப்பலுக்கு விடை கொடுத்தனர்.



*குஜராத் மாநிலத்தில் உள்ள அலங் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ள ஐ.என்.எஸ். விராட் கப்பல் 4 மாதம் நிறுத்தப்பட்டு இருக்கும், அதற்குள் யாரும் இதை வாங்க வரவிட்டால் இதை உடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

*ஆந்திர மாநில அரசு வீராட் கப்பலை வாங்கி விசாகப்பட்டினத்தில் நிறுத்தி அருங்காட்சியகமாக மாற்றும் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1000 கோடி தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

* உலகிலேயே நீண்டகாலம் கப்பற்படையில், 57 ஆண்டுகாலம் (இங்கிலாந்து கப்பற்படையில் 22 ஆண்டுகாலம்)  பணியாற்றிய கப்பல் ஐ.என்.எஸ்.விராட். இது கின்னஸ் சாதனையிலும் இடம் பெற்றது. இந்திய கப்பல்களுக்கு தாய் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகிறது.

* இந்தியாவின் 2-வது விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விராட் கடைசியாக கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 23ந்தேதி மும்பையில் இருந்து கொச்சிக்கு பயணம் மேற்கொண்டது. அதன்பின் அங்கிருந்து கயிறு கட்டி மும்பைக்கு இழுத்துவரப்பட்டது.

* ஐ.என்.எஸ். விராட் முழுமையான செயல்பாட்டில் இருக்கும் போது இதில் 1500 வீரர்கள் பணியாற்றினர். பின், இது செயல்பாட்டில் இருந்து நீக்கப்படும்போது 300 வீரர்கள் மட்டுமே இருந்தனர்.

* ஐ.என்.எஸ். விராட் கப்பலை ஓய்வுக்குப்பின் இதை அருங்காட்சியகமாக மாற்ற கப்பற்படை திட்டமட்டுள்ளது.

* கடலில் 2,250 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.என்.எஸ். விராட் உலகை 27 முறை சுற்றி வந்துள்ளது(10.94 லட்சம் கி.மீ.). இந்த கப்பலில் இருந்து விமானங்கள் 23 ஆயிரத்து 34 மணிநேரம் பறந்துள்ளன.

 

PREV
click me!

Recommended Stories

திருமணமான ஒரு மாதத்தில் கணவருக்கு வந்த அந்த சந்தேகம்.. மனவேதனையில் கதறிய 26 வயது ஐஸ்வர்யா.. இறுதியில் அதிர்ச்சி
திருப்பதி: திருமலை போகிறீர்களா? தரிசனத்தில் திடீர் மாற்றம்! பக்தர்கள் கவனத்திற்கு!