டிக்கெட் முன்பதிவு, வாடிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவை இண்டிகோ விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது
டிக்கெட் முன்பதிவு, வாடிக்கையாளர்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பது போன்றவற்றுக்கு செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதாக இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. “வாடிக்கையாளர் சேவை முகவர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், இயல்பான மொழி உரையாடல்களைப் பயன்படுத்தி முன்பதிவு செயல்முறையை எளிதாக்கவும் 6Eskai எனும் செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
“எங்களது AI போட் 1.7 டிரில்லியன் அளவுருக்களைக் கொண்டுள்ளது. இது பொதுவாக கேட்கப்படும் பல்வேறு வகையான கேள்விகளுக்கு எளிதாக பதிலளிக்கும்.” என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
undefined
காங்கிரஸின் கேவலமான அரசியல் முகம்: தெலங்கானா முதல்வர் மகள் கவிதா சாடல்!
ஜெனரேட்டிவ் ப்ரீ-ட்ரெய்ன்டு டிரான்ஸ்ஃபார்மர்ஸ் மீது தங்களது தரவு விஞ்ஞானிகள் விரிவான ஆராய்ச்சி செய்து, AI போட்களுக்கான புரோகிராமை வடிவமைத்துள்ளதாகவும், இது மனித நடத்தையைப் பிரதிபலித்து உணர்ச்சிப்பூர்வமாக, நகைச்சுவையாக கலந்துரையாடும் என அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“முதற்கட்டமாக AI போட்களை பயன்படுத்தியதில் வாடிக்கையாளர் சேவை முகவர் பணிச்சுமையில் 75 சதவீதம் குறைந்துள்ளது. இது அதன் செயல்திறனை காட்டுகிறது. மேலும், 6Eskai, முன்பதிவு செயல்முறையை மிகவும் எளிமையாக்குகிறது, இயற்கையான மொழி உரையாடல்களைப் பயன்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரை தடையின்றி வழிகாட்டுகிறது.” என இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.