இந்தியாவின் கட்டுமானத் துறை 2030-க்குள் 10 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கும்: புதிய தகவல்

By Ramya s  |  First Published Aug 4, 2023, 11:51 AM IST

இந்தியாவின் கட்டுமானத் துறை, இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது


இந்தியாவின் கட்டுமானத் துறை 2030-க்குள் 10 கோடிக்கும் அதிகமான வேலைகளை உருவாக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. நைட் ஃபிராங்க் இந்தியா மற்றும் ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ் (RICS) ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கட்டுமானத் துறை, இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் துறையாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது, இந்தத் துறையில் 7.1 கோடி (71 மில்லியன்) பணியாளர்கள் பணிபுரிகின்றனர், மேலும் இந்த எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் 10 கோடியை (100 மில்லியன்) தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியாவின் ரியல் எஸ்டேட் துறையின் உற்பத்தி 2030 ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இது தற்போதுள்ள 650 பில்லியன் டாலர்களில் இருந்து கணிசமான அதிகரிப்பு ஆகும். கட்டுமானத் துறையில் திறமையான வேலைவாய்ப்புகளை மையமாகக் கொண்டு, தற்போதுள்ள நிலைகள் மற்றும் இடைவெளிகளை இந்த அறிக்கை விளக்குகிறது. இந்தியாவின் ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்புத் துறைகள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், திறமையான ஊழியர்களுக்கான தேவை கணிசமாக உயரும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உற்பத்தித்திறனை அதிகரிக்க வழிவகுத்ததால், திறமையான தொழிலாளர்களின் தேவை மேலும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

விபத்து நடந்த பகுதியில் உள்ள மோட்டார் வாகன இழப்பீடு தீர்ப்பாயத்தில் இழப்பீடு கோரலாமா? உச்சநீதிமன்றம் உத்தரவு!

இந்தியாவின் கட்டுமானத் துறை இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 71 மில்லியன் (7.1 கோடி) பணியாளர்கள் கட்டுமானத் துறையில் பணிபுரிவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த பணியாளர்களில் 81 சதவீதம் பேர் திறமையற்றவர்கள் மற்றும் 19 சதவீதம் பேர் மட்டுமே திறமையான பணியாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கட்டுமான நிறுவனங்கள் மற்றும் ஆலோசனை நிறுவனங்கள் திறமனையான பணியாளர்களை எதிர்பார்க்கலாம். இதனால் திறமையான ஊழியர்களுக்கான தேவை அதிகரிக்கும். இந்த தேவையை பூர்த்தி செய்ய, திறமையான மனிதவள வழங்கல் அரசாங்க முயற்சிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சிலின் (NSDC) மதிப்பீட்டின்படி, ஒட்டுமொத்த பணியாளர்களில் 87 சதவீதம் பேர் (திறமையானவர்கள் மற்றும் திறமையற்றவர்கள்) ரியல் எஸ்டேட் துறையில் உள்ளனர்.மீதமுள்ள 13 சதவீதம் உள்கட்டமைப்புத் துறையில் பணிபுரிகின்றனர். 71 மில்லியனின் மொத்த கட்டுமானப் பணியாளர்களில், 4.4 மில்லியன் பேர் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் எழுத்தர் ஊழியர்கள் உட்பட முக்கிய திறமையான பணியாளர்களாக இருக்கின்றனர். 6.9 மில்லியன் பேர் தொழிற்பயிற்சி பெற்ற ஊழியர்கள் ஆவர்.

உறுதியான பொருளாதார வளர்ச்சிக்கான திறனைப் பயன்படுத்துவதற்கும், வேலைவாய்ப்பு இலக்குகளை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் கட்டுமானத் துறையில் உள்ள திறன் இடைவெளியை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பதவிகளில் பெண்களின் எண்ணிக்கை 61.3% உயர்வு : மத்திய அமைச்சர் முக்கிய தகவல்

click me!