நாட்டிலேயே முதல் முறையாக வாடகை தாய் முறையில் கன்று குட்டியை ஈன்ற பசு

Published : Jun 26, 2023, 04:00 PM IST
நாட்டிலேயே முதல் முறையாக வாடகை தாய் முறையில் கன்று குட்டியை ஈன்ற பசு

சுருக்கம்

நாட்டிலேயே முதல் முறையாக திருமலை திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வாடகை தாய் முறையில் பசு கன்று குட்டியை ஈன்று சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதியில் ஏழுமலையானுக்கு நடத்தப்படும் தூப தீப நெய்வேத்திய சமர்ப்பணங்களுக்கு நாட்டு பசு மாடுகள் மூலம் பெறப்படும் பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்டவை மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு 500 நாட்டு பசுகள் தேவையாக உள்ள நிலையில் 200 நாட்டு பசுகள் மட்டுமே திருப்பதி கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் கோசாலைக்கு தேவைப்படும் 300 உயர்ரக நாட்டு பசுகளை நன்கொடையாக வழங்க பக்தர்கள் தயாராக உள்ளனர். இந்நிலையில் பால் உற்பத்திக்காக தேவஸ்தான கோசாலையில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டள்ளது. அதன்படி அதிகம் பால் உற்பத்தி கொடுக்கும் உயர் ரக நாட்டு பசுகளை வாடகைத் தாய் முறையில் கலப்பு இனங்களாக உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்

இந்த நடவடிக்கைக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழகமும் கடந்த ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வடமாநிலங்களில் உள்ள உயர்ரக நாட்டு  பசுக்களின் கரு முட்டைகளை சேகரித்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு கொண்டு வந்தனர்.

கள்ளக்குறிச்சியில் அப்பாவி இளைஞரை கட்டி வைத்து 3 மணி நேரம் கொடூர தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு

பின்னர் அவை வேறு வகையான உயர் ரக நாட்டு காளைகளின் விந்தணு மூலம் கருத்தரிக்க செய்யப்பட்டன. அந்த கருக்களை ஓங்கோல் போன்ற தென்னிந்திய உயர் ரக நாட்டு பசுகளின் கர்ப்பப்பையில் செலுத்தி கோசாலையில் வளர்த்து வருகின்றனர். இந்தியாவிலேயே முதல் முறையான திருப்பதி தேவஸ்தான கோசாலையில் வளர்க்கப்படும் பசு வாடகைத்தாய் முறையில் கன்றை ஈன்றுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியா முழுவதும் இரட்டிப்பாகும் ரயில்களின் எண்ணிக்கை.. அஷ்வினி வைஷ்ணவ் சூப்பர் அறிவிப்பு..!
பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!