இந்தியாவில் பாரம்பரிய முரையில் செங்கல் மற்றும் பிற மூலப்பொருட்களை கொண்டு கட்டப்படும் கட்டிடங்களை போல இல்லமால் முழுக்க முழுக்க ரோபோ தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட அதிநவீன 3D அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகம் பெங்களூருவில் திறக்கப்பட்டுள்ளது. இது பிரபல லார்சன் & டூப்ரோ லிமிடெட் நிறுவனம் தயாரிக்க மற்றும் சென்னை ஐஐடியின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்டது.
பெங்களுருவில் அமைந்துள்ள இந்த தபால் அலுவலக கட்டிடம் 1021 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு கேம்பிரிட்ஜ் லேஅவுட்டில் தபால் துறையால் கட்டப்பட்ட இந்தியாவின் முதல் 3டி அச்சிடப்பட்ட தபால் நிலையத்தை ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்குத் திறந்து வைக்கிறார்.
தலைமை தபால் நிலையத்தின் 5வது மாடியில் உள்ள மேகதாது மண்டபத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் திறந்து வைத்தார். மேலும் இந்த நிகழ்வின்போது, 3D தொழில்நுட்பத்தில் அச்சிடப்பட்ட கட்டடத்தின் விஷேஷ தபால் உறை வெளியிடப்படவுள்ளது.
undefined
G20 மாநாடு : பாரத மண்டபத்தில் வைக்கப்பட உள்ள பிரம்மாண்ட நடராஜர் சிலை.. எங்கிருந்து செல்கிறது?
பாரம்பரிய பாணியில் செங்கல் மற்றும் பிற மூலப்பொருட்களுக்கு பதிலாக ரோபோ தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்ட அதிநவீன 3D அச்சிடப்பட்ட அஞ்சல் அலுவலகம் இது. இது லார்சன் & டூப்ரோ லிமிடெட் தயாரித்தது மற்றும் ஐஐடி சென்னை வழிகாட்டுதலின் கீழ் உருவாகியுள்ளது.
மெக்கானிக்கல் பிரிண்டர் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பின்படி வார்ப்பு வடிவில், அடுக்கு அடுக்காக கான்கிரீட்களை அடுக்கி இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. பாரம்பரிய பாணியில் கட்டப்பட்டால், இந்த கட்டிடம் முடிக்க பொதுவாக 6 முதல் 8 மாதங்கள் ஆகும். ஆனால், வெறும் 45 நாட்களில் இந்த கட்டிடம் முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.