
நாட்டின் 73% சொத்துக்கள் மற்றும் வளங்கள் ஒரு சதவிகித மக்களிடம் மட்டுமே குவிந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகளவில் மக்களிடையே வருவாய் சமநிலை கிடையாது. மிகப்பெரிய அளவில் வருவாய் வேறுபாடு உள்ளது.
சர்வதேச அமைப்பான ஆக்ஸ்போம் ஹவர்ஸ் என்ற அமைப்பு, இந்திய மக்களிடையே வருவாய் சமநிலை, சொத்துக்களின் சதவிகிதம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய குடிமக்களின் பொருளாதார வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டுகிறது அந்த ஆய்வறிக்கை.
அந்த ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் 73% சொத்துக்கள்/வளங்கள், வெறும் ஒரு சதவிகித மக்களிடம் தான் உள்ளது. வருவாய் சமநிலை இல்லாததே இதற்கு முக்கிய காரணம். கார்மெண்ட்ஸ் துறையில் பணியாற்றும் கடைநிலை ஊழியர், அத்துறையில் அதிக சம்பளம் பெறும் உயரதிகாரியை போல் உயர 941 ஆண்டுகள் ஆகும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் இதேநிலைதான் உள்ளது. இந்த ஆய்வறிக்கையின் மூலம் இந்திய மக்களின் வருவாய் வேறுபாடு அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.