
பஹல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது. பஹல்வால்பூர் அருகே இந்திய விமானம் வீழ்த்தப்பட்டதாகவும், அதன் புகைப்படம்/காணொளி எனவும் பகிரப்பட்டது. ஆனால், அது பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வதந்தி
'பஹல்வால்பூர் அருகே இந்திய ராஃபேல் விமானம் வீழ்த்தப்பட்டது' என்ற தலைப்பில் எக்ஸ் தளத்தில் புகைப்படம்/காணொளி பகிரப்பட்டது.
உண்மை
பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி தான் இது என மத்திய செய்தி மையம் தெரிவித்துள்ளது. டிடி நியூஸ் 2024 செப்டம்பர் 2-ல் வெளியிட்ட செய்தியில், பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாகவும், விமானி உயிர் தப்பியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்திய செய்தி மையத்தின் பதிவு:
முடிவு
இந்திய விமானம் வீழ்த்தப்பட்டது என்பது வதந்தி. பழைய விமான விபத்தின் புகைப்படம்/காணொளி தான் பகிரப்படுகிறது.