
Operation Sindoor : பாகிஸ்தான் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. ஆபரேஷன் சிந்தூர் என்று பெயரிடப்பட்ட இந்த ராணுவ நடவடிக்கை குறித்து இந்தியாவின் முன்னாள் ராணுவத் தலைவர் மனோஜ் முகுந்த் நரவனே எக்ஸ் தளத்தில் சுவாரஸ்யமான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்ற தாக்குதல் வெறும் டிரெய்லர் தான் இன்னும் மெயின் பிக்சர் பாக்கி இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் கீழ், ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் முற்றிலுமாக அழித்தது.