Ukraine-Russia War: இந்திய மாணவர் பலி... ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!!

Published : Mar 01, 2022, 06:34 PM IST
Ukraine-Russia War: இந்திய மாணவர் பலி... ரஷ்யா, உக்ரைன் தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன்!!

சுருக்கம்

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருரை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்த விவகாரத்தில்  டெல்லியில் உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. 

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருரை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்த விவகாரத்தில்  டெல்லியில் உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தில் பயணிகள் விமானத்துடன் விமானப்படை விமானங்களையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்களை விரைந்து மீட்பதற்காக விமானப்படை விமானங்களை பயன்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே உக்ரைனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார். இதை அடுத்து உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது.   இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  முன்னதாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷிய ராணுவத்தினர் அரசு கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷியப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர். இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கார்கிவ் பகுதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சிக்கி இந்திய மாணவர் பலியானது பெரும் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின், கெர்ஸன் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.  குண்டுவெடிப்பில், கட்டிடத்தின் 2வது மற்றும் 3வது தளங்கள் தீப்பிடித்தன. தாக்குதலில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் வரும் தகவல்கள் தெரிக்கின்றன. இந்நிலையில், உக்ரைனில் ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பெங்களூருரை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்த விவகாரத்தில்  டெல்லியில் உக்ரைன், ரஷிய நாட்டு தூதர்களுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியது. இருநாட்டு தூதர்களும் நேரில் அழைக்கப்பட்டு உக்ரைனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

LPG Cylinder: கேஸ் சிலிண்டர் புக் பண்ணியும் டெலிவரி வரலையா? டீலர் அதிக காசு கேட்கிறாரா? இத பண்ணுங்க போதும்!
12 நாட்களில் 7 புண்ணியத் தலங்கள்! IRCTC வழங்கும் மெகா ஜியோதிர்லிங்க யாத்திரை