Ukraine-Russia War: உக்கிரமடையும் போர்... இந்தியர்களை மீட்க விமானப்படை விமானங்கள்... மத்திய அரசு முடிவு!!

Published : Mar 01, 2022, 04:37 PM IST
Ukraine-Russia War: உக்கிரமடையும் போர்... இந்தியர்களை மீட்க விமானப்படை விமானங்கள்... மத்திய அரசு முடிவு!!

சுருக்கம்

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது.  சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தபோதும், உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில் இருந்து ரஷியா பின்வாங்க தயாராக இல்லை. ஒருபுறம் பேச்சு நடத்த உக்ரைனுக்கு அழைப்பு விடுத்தபோதும், அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது. இந்த சூழலில் கீவ் நகர் அருகே ரஷிய ராணுவ படைகள் நெருங்கி உள்ளன. இந்த படைகள் வரிசையாக 40 மைல்கள் தொலைவுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே கீவ் உக்ரைனில் நடந்து வரும் ரஷிய ராணுவ நடவடிக்கைக்கு மத்தியில், தற்போது கெர்சன் நகரை ரஷியா ராணுவம் தாக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் விமானப்படை விமானங்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆபரேஷன் கங்கா திட்டத்தில் பயணிகள் விமானத்துடன் விமானப்படை விமானங்களையும் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியர்களை விரைந்து மீட்பதற்காக விமானப்படை விமானங்களை பயன்படுத்த பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.போர் தீவிரமடைந்திருக்கும் இந்த சூழலில் அங்கு சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நான்கு மத்திய அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக, டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை இணைய உள்ளதாகவும், ஆப்ரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனிடையே உக்ரேனின் கீவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இண்டிகோ விமானம் ரத்து.. திருமண வரவேற்பில் வீடியோ மூலம் கலந்துகொண்ட புதுமணத் தம்பதி!
பீகார் SIR பணியில் தில்லுமுல்லு.. நீக்கப்படாத 5 லட்சம் போலி வாக்காளர்கள்!