Global Technology Summit : உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாட்டின் எட்டாவது பதிப்பு, கடந்த டிசம்பர் 4ம் தேதி முதல் நாளை 6ம் தேதி வரை புதுதில்லியில் நடைபெற உள்ளது. உச்சிமாநாட்டின் தொடக்க நிகழ்வு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் உரையுடன் துவங்கியது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் காணொளிக்காட்சி மூலம் பங்கேற்று பேசிய பாரத நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பல்வேறு விஷயங்களை பர்கரிந்துகொண்டார். அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு..
"இந்த உலகளாவிய தொழில்நுட்பத்தின் பங்குதாரர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உச்சி மாநாடு 2023 Carnegie India நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. உண்மையைச் சொல்வேண்டுமென்றால், உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருந்தேன், ஆனால் பார்லிமென்ட் கூட்டத் தொடர் மற்றும் சில தவிர்க்க முடியாத காரணங்களால் என்னால் நேரில் வர முடியவில்லை. ஆகவே காணொளிக்காட்சி காட்சி வாயிலாக நான் உரையாடுகிறேன்".
"நண்பர்களே இந்த ஒற்றுமையை பாருங்கள், இந்த உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் உங்களோடு நான் கலந்துரையாட தற்பொழுது எனக்கு உதவி உள்ளதும் அதே தொழில்நுட்பம் தான். ஆகவே, இந்த நிகழ்வே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் என்பது எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துரைக்கின்றது. உங்களோடு நான் பேசிக் கொண்டிருக்கும் இதே நேரம் மெய் நிகராக உங்களோடு கலந்துரையாடுகிறேன், ஆனால் அதே நேரம் நான் வேறெங்கோ உள்ளேன் என்று நினைக்கும் பொழுது இதுவே தொழில்நுட்பத்தின் ஆற்றல் என்று கூற விரும்புகிறேன்".
டெல்லி இந்தியா கூட்டணி கூட்டம்: புறக்கணிக்கும் நிதிஷ்குமார்!
"என்னால் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரே நாளில் பல்வேறு நாடுகளில் நடக்கும் மாநாட்டில் கூட பங்கேற்க முடியும் இதுவே இன்றைய தொழில்நுட்பம் நம்மை எந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஆகவே நண்பர்களே தொழில்நுட்பம் என்பது ஒரு விஷயத்தை மெருகேற்றும் மாபெரும் விஷயமாக கருதப்படுகிறது".
"உதாரணமாக மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய ஆசிரியர்கள் வீட்டிலிருந்தே இணையம் மூலம் கற்பித்து வருகின்றனர். உலகில் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு மருத்துவர்கள் பல நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இக்கட்டான சூழ்நிலையில் திறன் மிக்க மருத்துவர் ஒருவரின் ஆலோசனையை கூட நொடிகளில் கேட்டு நோயாளிகளை குணப்படுத்தும் அளவிற்கு தற்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது".
தொழில்நுட்பம் என்பது பல்வேறு அம்சங்களை மெருகேற்றும் திறன் கொண்டது - உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் pic.twitter.com/N7SFGThk99
— Asianetnews Tamil (@AsianetNewsTM)"கல்வி மருத்துவம் தொழில்நுட்பம் என்று தொடர்ச்சியாக மிகப்பெரிய வளர்ச்சிக்கு கண்டு வருகிறோம். அண்மையில் நடந்த ரஷ்ய உக்கிரேன் பிரச்சினையாக இருந்தாலும் சரி, இஸ்ரேல் ஹமாஸ் பிரச்சினையாக இருந்தாலும் சரி அதில் தொழில்நுட்பம் பெரிய அளவில் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நமது நாட்டு போர் வீரர்களையும் நாட்டு மக்களையும் காக்கவும் இந்த தொழில்நுட்பம் பெரிய அளவில் பயன்படுகிறது என்பதை உலக நிகழ்வுகளில் இருந்து நாம் தொடர்ச்சியாக கற்றுக் கொள்கிறோம்.
வெள்ள நிவாரணமாக ரூ.6230 கோடி.. மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வையுங்கள்.. மக்களவையில் டி.ஆர் பாலு..!
உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பேசிய பாரத நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் மேலும் பல தகவல்களை தனது மெய்நிகர் காணொளி பேச்சின் போது முன் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் தேவையையும் அவர் தனது பதிவில் உறுதி செய்துள்ளார்.