Indian Coast Guard Day 2025 : இன்று அனுசரிக்கப்படும் இந்திய கடலோர காவல் படை தினம் (ICG) குறித்த சுவாரசிய தகவல்களை இங்கு பார்ப்போம்.
இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவான இந்திய கடலோர காவல் படை, நம் நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. கடலில் உள்ள சூழலியலை சீர்குலையாமல் பாதுகாப்பது, கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சட்டவிரோதமாக வேட்டையாடுபவர்களை கையும்களவுமாக பிடிப்பது உள்ளிட்ட பணிகளை கடலோர காவல்படையினர் செய்து வருகின்றனர். இந்திய கடலோர காவல் படை ஆரம்ப காலத்தில் இந்திய கடற்படையுடன் ஒன்றிணைந்து செயல்பட்டது. இந்த படையின் நோக்கமே கடல்வழியாக நடக்கும் சட்டவிரோத செயல்களை தடுப்பதும், நாட்டின் கடல் வளங்களை பாதுகாப்பதும்தான். 1977ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் இந்திய கடலோர காவல் படை தனியாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நாளை நினைவுகூரும் வகையில் 1978ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று இந்திய நாடாளுமன்றம் கடலோர காவல்படை தினத்தை 'பிப்.1' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ஆம் தேதி கடலோர காவல்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவின் அமைவிடம்:
நம் இந்தியாவின் அமைப்பை தீபகற்பம் என்றே சொல்வார்கள். மூன்று பக்கம் கடல், ஒரு பக்கம் நிலம் என இந்தியா கடல்களை முப்பக்கமும் அரணாகக் கொண்டுள்ளது. மேற்கு திசையில் வங்காள விரிகுடா, கிழக்கு திசையில் அரபிக்கடல், தெற்கில் இந்திய பெருங்கடல் என மூன்று திசைகளிலும் கடல்கள் அரணாக உள்ளன. இங்கு இந்திய கடலோர காவல் படை எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும். போதைபொருட்கள் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்கள், தீவிரவாத ஊடுருவல்கள் ஆகியவற்றைத் தடுப்பதும் இப்படையின் பணியாகும்.
இதையும் படிங்க: 2025ல் வெற்றிகரமான தொழில்முனைவோராக வேண்டுமா? இந்த 'டிப்ஸ்' பாலோ பண்ணுங்க
கடல் வழி வர்த்தகம்
பண்டைய காலங்களில் வர்த்தகத்திற்கு கடல் வழியை தான் அதிகம் பயன்படுத்தினார்கள். பிற நாடுகளுடன் வணிக ரீதியான தொடர்பு இருப்பதற்கு கடல் போக்குவரத்து தான் அடிப்படையாக அமைந்தது. அண்டை நாடுகளான இலங்கை, சீனா, மியான்மர் ஆகியவற்றுடன் கடல்வழி போக்குவரத்துதான் பிரதானமாக இருந்தது.
ஆங்கிலேயர்களின் வருகை
200ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் வர கடல்வழி வாணிகம் தான் காரணம். போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா இந்தியாவுக்குள் நுழைந்த பின்னரே ஆங்கிலேயர்களும் அடியெடுத்து வைத்தனர். கடல்வழி போக்குவரத்து என்பது சர்வதேச எல்லைகளை இணைப்பதோடு, வணிகம் செய்யவும் வாய்ப்பாக உள்ளது. இதன் மூலம் வளங்களை பெருக்கவும் முடியும். அதே சமயம் வளங்களை சூறையாடவும் முடியும். ஆகவே கடற்பரப்பின் எல்லைகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது அவசியம்.
இதையும் படிங்க: டிகிரிகூட தேவையில்ல... கைநிறைய சம்பளத்துடன் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள்!
கடல் வழி ஊடுருவல்கள்
சட்டவிரோதமான பல பரிமாற்றங்களுக்கு கடல்வழி போக்குவரத்து காரணமாக உள்ளது. சட்டவிரோதமாக ஒரு நாட்டிற்குள் நுழைய, போதை பொருட்கள் கடத்த கடல்வழியை தான் தேர்ந்தெடுக்கின்றனர். இதைத் தடுக்க கடலோர காவல் படையினர் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அவர்களின் கூடுதல் கண்காணிப்பு தான் பல அச்சுறுத்தல்களில் இருந்து நாட்டை காக்கிறது.
இந்திய கடலோர காவல் படை
இந்தியாவின் அரணாக விளங்கும் கடற்பரப்பை பாதுகாப்பதன் மூலமாக நாட்டில் வளங்களையும் பாதுகாக்க முடியும். ஊடுருவல்களை தடுத்து, கடல்வழி போக்குவரத்தை முறையாக கண்காணிப்பதன் மூலம் தேசிய பாதுகாப்பை மேம்படுத்த முடியும். இந்த பணியை நம் இந்திய கடலோர காவல்படையினர் அர்ப்பணிப்புடன் செய்துவருகின்றனர். அப்படிப்பட்ட காவல் படையை பெருமைப்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.