
Draupadi Murmu feeding curd and sugar to Nirmala Sitharaman : 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமையச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8ஆவது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக 8ஆவது பட்ஜெட்டை அவர் இன்று தாக்கல் செய்கிறார். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற நிர்மலா சீதாராமனுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தயிர் மற்றும் சர்க்கரையை வழங்கினார். தனது கையால் முதலில் தயிர் ஊட்டி விட்ட திரௌபதி முர்மு அடுத்ததாக சர்க்கரையை ஊட்டிவிட்டார். இது பாரம்பரியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கான அடையாளமாக பார்க்கப்படுகிறது.
தயிர் மற்றும் சர்க்கரை ஊட்டுவது இது முதல் முறை அல்ல. ஒவ்வொரு முறையும் பட்ஜெட்டிற்கு முன்னதாக நிதியமைச்சருக்கு குடியரசுத் தலைவர் தயிர் மற்றும் சர்க்கரை கொடுப்பது வழக்கம். கடந்த முறையும் இது போன்று நிதியமைச்சருக்கு குடியரசு தலைவர் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தயிர்-சர்க்கரை கொடுக்க காரணம்?
சுப நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது அவருக்கு தயிர் மற்றும் சர்க்கரை கொடுப்பது என்பது பாரம்பரியம். காலம் காலமாக இந்து மதத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு பின் ஒரு காரணம் இருக்கிறது. பல பரிகாரங்களில் தயிர் பயன்படுத்தப்படுகிறது. தயிர் சுக்கிர பகவானின் காரணி. சுக்கிர பகவானின் செல்வாக்கின் காரணமாக மகிழ்ச்சி, செல்வம் மற்றும் பிற பொருள் சுகங்கள் கிடைக்கின்றன. அதில் சர்க்கரை சேர்க்கும்போது, சுக்கிர கிரகத்தின் சுப பலன்கள் அதிகரிக்கும். சுப காரியங்களைச் செய்வதற்கு முன் தயிர்-சர்க்கரை சாப்பிட்டால், எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தயிர்-சர்க்கரையும் ஆரோக்கியம்:
வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன் தயிர்-சர்க்கரை சாப்பிடும் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் ஏன் தொடங்கினார்கள் என்பதற்கு ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. அதன்படி, தயிரில் புரோபயாடிக்குகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன, அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மேலும், தயிர்-சர்க்கரை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து, சோர்வு நீங்கும். தயிரில் சர்க்கரை சேர்க்கும்போது அது குளுக்கோஸாக செயல்பட்டு உடனடி ஆற்றலைத் தருகிறது. தயிர்-சர்க்கரையின் பல நன்மைகள் காரணமாக இந்த பாரம்பரியம் இன்றும் தொடர்கிறது. ஆனால், இது எல்லா தருணங்களில் இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. இது போன்ற பல காரணங்களால் தான் பட்ஜெட்டிற்கு முன்னதாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிதியமைச்சருக்கு தயிரும் சர்க்கரையும் கொடுக்கப் படுகிறது.
Budget 2025 : மாவட்டம் தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம்! நிதியமைச்சர் அறிவிப்பு!
இந்த நிகழ்ச்சியில் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரியும் கலந்து கொண்டார். அப்போது பட்ஜெட்டுக்கான முன்மொழிவுகளின் வரையறைகள் குறித்தும் நிர்மலா சீதாராமன் குடியரசுத் தலைவருடன் கலந்துரையாடினார். இதையடுத்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அதன் பிறகு அமைச்சரவைக் கூட்டத்திற்கு சென்று பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார். நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகள் குறித்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.