இந்திய ராணுவத்தில் அதிரடி சீருடை மாற்றம்; ஆகஸ்ட் ஒன்று முதல் அமலுக்கு வருகிறது!!

By Asianet Tamil  |  First Published May 9, 2023, 2:10 PM IST

இந்திய ராணுவத்தைச் சேர்ந்த பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் பொதுவான சீருடையை வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. 


மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் உட்பட பிரிகேடியர் மட்டத்திலும் அதற்கு மேற்பட்ட பதவிகளிலும் உள்ள அதிகாரிகளுக்கு படைப்பிரிவுகளில் எல்லை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, நியாயமான மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்தும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த ராணுவ கமாண்டர் மாநாட்டில் சீருடை மாற்ற முடிவும்  எடுக்கப்பட்டுள்ளது. அப்போது அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் கேட்கப்பட்டுள்ளது. ஒருமித்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

சீருடை எப்படி இருக்கும்?

தலைக் கவசம், தோள்பட்டை ரேங்க் பேட்ஜ்கள், சட்டை காலர் பேட்ஜ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை பொதுவானதாக இருக்கும். லேனியார்ட்ஸ் எனப்படும் கயிறு போன்ற ஒன்றை இனிமேல் ராணுவ அதிகாரிகள் அணிய மாட்டார்கள். 

இந்திய ராணுவத்தை வல்லமை பொருந்தியதாக மாற்ற இருக்கும் அருமையான திட்டங்கள்!!

''ஒரே சீருடை அனைத்து மூத்த நிலை அதிகாரிகளுக்கும் பொதுவான அடையாளத்தை உறுதி செய்யும், அதே நேரத்தில் இந்திய ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளை பிரதிபலிக்கும்" என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன. 

இந்திய ராணுவத்தின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்

இந்திய ராணுவத்தின் ஆயுதப்படை, படைப்பிரிவுகள் மற்றும் சேவை என்று பல்வேறு அமைப்புகளுக்கு பல்வேறு சீருடைகள் உள்ளன. ஆயுதங்கள் அல்லது படைப்பிரிவுக்குள்ளேயே இளையவர்கள் மற்றும் அதிகாரிகள் என்ற சிறப்பு அங்கீகாரம் அவசியம் என்றும் ராணுவம் வட்டாரம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற சீருடை அதிகாரிகளுக்கு இடையே நல்ல ஒத்துழைப்பை, இணைக்கத்தை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ட்ரவுசரில் உள்ள பெல்ட்டை மறைத்து சட்டை அணியமாட்டார்கள். பழைய சீருடையைவிட இது ஒரு முறைசாரா தோற்றத்தைக் கொண்டு இருக்கும். ராணுவ வீரர்கள் சட்டைக்கு அடியில் அணிந்திருக்கும் வட்டக் கழுத்து டி-சர்ட்டையும் அணிவார்கள். கடந்த ஆண்டு, இந்திய ராணுவம் அமெரிக்க ராணுவம் போன்று டிஜிட்டல் வடிவிலான போர் சீருடைகளை ஏற்றுக்கொண்டது.

இந்திய இராணுவத்திற்கான புதிய போர் சீருடை… வடிவமைப்புக்கு காப்புரிமை பெற்று அசத்தல்!!

click me!