
பாகிஸ்தான், சீனா, ஆகிய நாடுகளுடன் மோதல் ஏற்பட்டால் அதனை சமாளிக்க இந்திய ராணுவம் முழு தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த ஜெனரல் பிபின் ராவத், காஷ்மீரில் இளைஞர்களை தீவிரவாத பாதையில் திருப்ப பாகிஸ்தான் சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம்சாட்டினார்.
காஷ்மீரில் நிலைமை விரைவில் சீரடையும் என நம்பிக்கை தெரிவித்த ஜெனரல் ராவத், நிலைமையை சமாளிக்க ராணுவம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
ராணுவ தளவாடங்களை நவீனப்படுத்த மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், இதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் மோதல்கள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்க முழு தயார் நிலையில் ராணுவம் இருப்பதாகவும் தெரிவித்தார்.