
பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியான நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் சிந்தூர் என்ற ஆபரேஷன் மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் தாக்குதலை மேற்கொண்டுது. இதில் அப்பாவி மக்கள் 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று இரவு பாகிஸ்தான் போர் விமானங்கள் மூலமாகவும், ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் மூலமாக தாக்க தொடங்கியது.
இதில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு வானிலேயே தடுத்து நிறுத்தியது. 3 பாகிஸ்தான் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டது. குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானங்களை இந்திய வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்தபோது வெடிச்சத்தங்கள் கேட்டன. மேலும் ஜெய்சால்மரில் இந்திய வான் பாதுகாப்புப் படையினரால் பாகிஸ்தானிய ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டன.
பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல்
வானில் வெடிச்சத்தங்களும் வெளிச்சமும் கேட்டன.இதனையடுத்து பாகிஸ்தான் எல்லையோரத்தில் உள்ள பகுதிகளான ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட்டது. பாகிஸ்தானின் தொடர் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்த நிலையில் இந்தியா பதில் தாக்குதல்களை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாகூர், சியால்கோட் மீது இந்திய விமானப்படைகள் மற்றும் ட்ரோன், ஏவுகனைகள் தாக்குதல்களை நடத்தி வருகிறது.