எதிரிகளை தூள் தூளாக்கி.. கூலாக கவிதையை பதிவிட்ட இந்திய ராணுவம்..! அப்படி என்ன கவிதை தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Feb 26, 2019, 2:03 PM IST
Highlights

காஸ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். பின்னர் நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது. 

காஸ்மீர் மாநில புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். பின்னர் நாடு முழுக்க கடும் கண்டனம் எழுந்தது. ஒவ்வொரு இந்தியனுக்கும் ரத்தம் கொதித்தது. 

அதற்கெல்லாம் பதிலடி கொடுக்காமல் ஓய மாட்டோம் என அன்றே முடிவெடுத்த பிரதமர் மோடி இந்திய ராணுவத்தை தயார் படுத்த ஆணையிட்டு, சிறப்பு படை தயாரானது. ராணுவத்திற்கு இந்தியா முழு சுதந்திரத்தை கொடுத்தது..இந்நிலையில் இன்று காலை, பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் பயங்கரவாதிகள் முகாம் மீது, இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை போட்டு தாக்கியது.

ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் முகாமை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்திய இந்திய ராணுவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து மழை பொங்கி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து, இந்திய ராணுவ கூடுதல் இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில், கவிதை ஒன்றை பதிவிட்டு உள்ளனர். இந்த கவிதை கவிஞர் ராம்திரி சிங்கின் உடையது. அதன்படி,"நாங்கள் எப்போதும் தயார்...எதிரிகள் முன் நாம் சாந்தமாகவும் சாதுவாகவும் இருந்தால் நம்மை அவர்கள் கோழைகளாக நினைத்து விடுவார்கள். மேலும், நாம் வலிமையாக இருந்து, வெற்றி பெரும் சமயத்தில் தான் அமைதி நிலவும் என்றும் அந்த கவிதை மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒரு பக்கம் பாகிஸதானில் குண்டு போட்டு விட்டு, அமைதியாக கவிதை பதிவிட்ட இந்திய ராணுவத்திற்கு உலக மெங்கும் உள்ள இந்தியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

click me!