இந்தியாவை தாக்க எல்லை வரை வந்த போர் விமானங்கள்... அஞ்சி நடுங்கி உதறலுடன் திரும்பிய பாகிஸ்தான் ராணுவம்..!

By Thiraviaraj RMFirst Published Feb 26, 2019, 1:57 PM IST
Highlights

இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 

இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக தகவல் வெளியாகி உள்ளன. 

புல்வாமா தாக்குதலில் 49 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. விதிமுறைகளை இந்திய விமானப்படை மீறியுள்ளதாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் இன்று காலை முதல் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

2 மிராஜ் 2000 என்ற ஜெட் போர் விமானம் 1,000 கிலோ எடை கொண்டு வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியுள்ளது.  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீதும், லஷ்கர்- இ- தய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்புகள் முகாம்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியிலும் இந்திய விமானப்படை விமானங்கள் துல்லிய தாக்குதலை நடத்தியது.

 

இந்தியாவின் இந்த அதிரடி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க திட்டமிட்ட பாகிஸ்தான் அதற்கான வேலைகளில் இறங்கியது. போர் தொடுக்கும் வகையில் இந்திய எல்லை வரை வந்த பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு தாக்குதலை சமாளிக்க முடியாமல் திரும்பிச்சென்றன. 

இந்நிலையில், இந்திய அதிகாரிகள் குஜராத் கட் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் இந்திய விமானப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே வேளை பூஞ்ச், கனாசக் ஆகிய இடங்களில் எல்லைப்பகுதிகளுக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். 

click me!