பாகிஸ்தானின் F-16, F-17 போர் விமானங்களை நொறுக்கிய இந்தியாவின் S 400 Sudarshan Chakra!!

Published : May 08, 2025, 09:46 PM ISTUpdated : May 08, 2025, 10:50 PM IST
பாகிஸ்தானின் F-16, F-17 போர் விமானங்களை நொறுக்கிய இந்தியாவின் S 400 Sudarshan Chakra!!

சுருக்கம்

ஜம்முவில் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இந்திய வான் பாதுகாப்பு பாகிஸ்தானின் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது. ஜம்மு விமான நிலையம் உட்பட பல இடங்கள் தாக்கப்பட்டன, இந்தியா எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பைப் பயன்படுத்தி ராக்கெட்டுகளை இடைமறித்தது.

ஜம்மு மற்றும் பஞ்சாபில் பல இடங்களில் இஸ்லாமாபாத் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் போர் விமானங்களான F-16, F-16ஐ இரண்டையும் சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையில், உதம்பூரில் ட்ரோன் தாக்குதல்களும் முறியடிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்னூரில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஒரு F-16, இரண்டு F-16 போர் விமானங்களை S 400 Sudarshan Chakra வானில் சுட்டு வீழ்த்தியது. 

ஒரு பெரிய தாக்குதலாக, விமான நிலையம் உட்பட ஜம்முவில் உள்ள பல இடங்களை பாகிஸ்தான் ஒரே நேரத்தில் தாக்கியது. வியாழக்கிழமை இரவு சர்வதேச எல்லையைத் தாண்டி ஜம்முவில் ராக்கெட்டுகள் வீசப்பட்டன. இதனால் ஜம்முவில் சிறிது பதற்றம் நிலவி வருகிறது. இந்தியாவும் அதிரடி தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானின் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது.

ஜம்மு விமான நிலையத்தை ட்ரோன்களில் ஒன்று தாக்கியது, இதனால் போர் விமானங்கள் பதிலுக்கு விரைந்து வந்தன. இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்புகளை செயல்படுத்தியது, இது உள்வரும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாக தடுத்தது. ஜம்மு சிவில் விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா மற்றும் அருகிலுள்ள பகுதிகள் மீது எட்டு பாகிஸ்தான் ஏவுகணைகளை S-400 Sudarshan Chakra வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்தது. ஜம்மு பல்கலைக்கழகம் அருகே இரண்டு பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதற்கிடையில், ஜெய்சால்மரில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டன.

பாகிஸ்தானில் இருந்து சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா மற்றும் ஆர்னியாவை நோக்கி 8 ஏவுகணைகளை இஸ்லாமாபாத் ஏவியதாக செய்தி வெளியாகி உள்ளது. அனைத்தும் வான் பாதுகாப்பு கருவியான S-400 Sudarshan Chakra- ஆள் இடைமறித்து அழிக்கப்பட்டது. ஜம்மு மீதான காட்சிகள் இஸ்ரேல் மீதான ஹமாஸ் பாணி தாக்குதலை போல் இருந்தது என்று நேரடியாக பார்த்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

ஹமாஸ் போன்று இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்:

பாகிஸ்தான் ராணுவம் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பைப் போல செயல்பட்டு வருவதாக கருத்துக்கள் எழுந்துள்ளது. பாகிஸ்தான் எதற்கும் தயங்காமல் தாக்குதலை நடத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இன்று காலை லாகூரில் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதையடுத்து, லாகூரில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இஸ்லாமாபாத் இந்திய எல்லை மாநிலங்களான ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

கடந்த மாதம் ஐஎஸ்ஐ,  ஹமாஸ் பாகிஸ்தான் காஷ்மீரில் சந்தித்ததாக செய்தி வெளியாகி இருந்த நிலையில், ஹமாஸ் போன்ற தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்தியாவின் முப்படைகளும் சரியான பதிலடி கொடுத்து வருகிறது.

S-400 Sudarshan Chakra வான்வெளி பாதுகாப்பு சாதனம்:

இந்தியாவில் நான்கு S-400 படைப்பிரிவுகள் உள்ளன. ஒன்று பதான்கோட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாபை உள்ளடக்கியது. மற்றொன்று ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள முக்கிய பகுதிகளைப் பாதுகாக்கிறது. இந்தியாவில், S-400 வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஆயுதப் படைகளால் "சுதர்ஷன் சக்ரா" என்று குறிப்பிடப்படுகிறது.

இந்திய புராணங்களுடன் தொடர்புடையது சுதர்ஷன் சக்ரா. அங்கு சுதர்ஷன் சக்ரா என்பது விஷ்ணுவால் பயன்படுத்தப்படும் ஒரு சக்திவாய்ந்த சுழலும் ஆயுதமாக கருதப்படுகிறது. இதேபோல், S-400 Sudarshan Chakra அமைப்பு இந்தியாவின் பாதுகாப்பு ஆயுதங்களில் ஒரு சக்திவாய்ந்த கருவியாகக் கருதப்படுகிறது, இது வான்வழி அச்சுறுத்தல்களை விரைவாகக் கண்டறிந்து அழிக்கும்  திறன் கொண்டது. தற்போது பாகிஸ்தானில் இருந்து வரும் விமானங்களை, ட்ரோன்களை இந்த S-400 Sudarshan Chakra அழித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து S-400 Sudarshan Chakra-வை இந்தியா சமீபத்தில் வாங்கியதாக கூறப்படுகிறது.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!