தேசிய கொடி வடிவில் கால் மிதியடி… இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து திரும்பப் பெற்றது அமேசான்..

First Published Jan 12, 2017, 3:34 PM IST
Highlights

தேசிய கொடி வடிவில் கால் மிதியடி… இந்தியாவின் எச்சரிக்கையை அடுத்து திரும்பப் பெற்றது அமேசான்..

இந்தியாவின் கடும் எச்சரிக்‍கையை அடுத்து, பிரபல அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், இந்திய தேசிய கொடி வடிவிலான கால் மிதியடி விற்பனையை திரும்பப் பெற்றுள்ளது. 

சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கும் அமேசான் என்ற ஆன்லைன் வர்த்தக இணையதள நிறுவனம், இந்திய தேசியக்‍ கொடி வடிவத்தில் கால் மிதியடிகளை தயாரித்து, கனடா நாட்டில் விற்பனை செய்தது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும், டிவிட்டரில் பதிவிட்ட மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அந்நிறுவனத்திற்கு கடும் எச்சரிக்‍கை விடுத்தார்.

சர்ச்சைக்‍குரிய இதுபோன்ற தயாரிப்புகள் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என்றும், இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அவ்வாறு செய்யாவிட்டால் அமேசான் நிறுவன அதிகாரிகளுக்‍கு இந்திய விசாக்கள் வழங்கப்பட மாட்டாது என எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்‍கையைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் தேசியக்‍ கொடியை அவமதிக்‍கும் வகையில் தயாரிக்‍கப்பட்ட மிதியடியை தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

தனது வலைதள பக்‍கத்தில் இதுதொடர்பான கட்டுரையையும் நீக்‍கியுள்ளது. இனி இந்த மிதியடி விற்பனை செய்யப்பட மாட்டாது என அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.    

tags
click me!