ரூ. 2 ஆயிரம் கோடி ரெடி.... இந்தியா-பாகிஸ்தான் பைனலில் ‘சூடு பறக்கும் சூதாட்டம்’...

 
Published : Jun 17, 2017, 09:05 PM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
ரூ. 2 ஆயிரம் கோடி ரெடி.... இந்தியா-பாகிஸ்தான் பைனலில் ‘சூடு பறக்கும் சூதாட்டம்’...

சுருக்கம்

India vs Pakistan Rs 2000 crore bet on India Pak title clash

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடக்கும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டத்தில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்கு சூதாட்டம் நடக்கும் என்று அனைத்து இந்திய சூதாட்ட அமைப்பு(ஏ.ஐ.ஜி.எப்.) தெரிவிக்கிறது.

ஐ.சி.சி.ஐ. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து கடந்த ஒருவாரமாக நடந்து வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில், விராத்கோலி தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. 

பரம வைரிகளான இரு அணியும் லீக்ஆட்டத்தல் மோதினாலே அனல் பறக்கும். அப்படி இருக்கையில், சாம்பியன்ஸ் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதுகின்றன என்றால் இரு நாட்டு ரசிகர்களையும் ஆட்டம் இருக்கையின் நுனிக்கு அமரவைக்கும்.

அதைக் காட்டிலும், சூதாட்டம் கொடிகட்டிப் பறக்கவா செய்யும். அதிலும் இங்கிலாந்து நாட்டில் சூதாட்டம் என்பது அரசு சட்டரீதியாக அங்கீகரித்த ஒரு முறையாகும். அப்படி இருக்கையில், இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தில் சூதாட்டம் சூடு பறந்து உச்சத்தை அடையும் என்று தரகர்கள் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து அனைத்து இந்திய சூதாட்ட அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரிரோலாண்ட் லேண்டர்ஸ் கூறுகையில், “வௌ்ளிக்கிழமையில் இருந்தே சூதாட்டம் கொடிகட்டி பறக்கிறது இந்தியா மீது ஒருவர் ரூ.100 சூதாட்டம் வைத்தால், மற்றொருவர் ரூ.147 வைத்தார். இந்தியாவுக்கு லீக்ஆட்டத்திலேயே மதிப்பு கடுமையாக அதிகரித்தது. இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் வெல்லும் என அந்த அணி மீது  ரூ.300 வைக்கிறார்கள்.

போட்டி நடக்கும் போது சூதாட்டத்தின் அளவு இன்னும் அதிகரிக்கும். எங்கள் கணிப்பின்படி, இங்கிலாந்தில் சூதாட்டத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இருக்கிறது. ஆதலால், ரூ.2 ஆயிரம் கோடி வரை பெட்டிங் நடக்க வாய்ப்பு உள்ளது.

அதிலும், இரு அணிகளும் 10 ஆண்டுகளுக்கு பின் இறுதிப்போட்டியில் மோதுவதால், சூதாட்டத்தின் அளவு கடுமையாக இருக்கும். சர்வதேச அளவில் இங்கிலாந்து சூதாட்ட இணையதளத்தை தரகர்கள் நாடுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!