
ராஜஸ்தான் மாநிலத்தில் சரியாக வேலை செய்யாத ஊழியர்களை கண்டறிந்து அவர்களை வீட்டுக்கு அனுப்ப (பணி நீக்கம்) அரசு உத்தரவிட்டுள்ளது.
50 வயது ஆனவர்கள்
இதற்காக 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைந்தவர்களில், சரியாக வேலை பார்க்காத அரசு ஊழியர்களை கண்டறியும்படி அந்தந்த துறை தலைவர்களுக்கு மாநில தலைமை செயலாளர் ஓ.பி.மீனா சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது-
பணி நீக்கம்
பணியில் சேர்ந்த 15 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் அல்லது 50 வயது நிறைவு பெற்றவர்களை கண்டறிய வேண்டும். இந்த இரண்டில் எது முதலில் இருந்தாலும், அவர்களின் பணி திருப்தி அளிக்காத நிலையில் இருந்தாலும், ஒழுங்காக வேலை பார்க்காமல் இருந்தாலும், வேலை செய்ய முடியாத நிலையில் இருந்தாலும் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
3 மாதம் அவகாசம்
இதனை அனைத்து துறை தலைவர்களும் 3 மாதத்தில் செய்து முடிக்க வேண்டும். அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் வழங்கி பணி நீக்கம் செய்யலாம் அல்லது மூன்று மாத சம்பளம், படிகள் ஆகியவற்றை வழங்கி உடனடியாக பணி நீக்கம் செய்யலாம்’’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.