விண்வெளியில் மாஸ் காட்ட இஸ்ரோ - நாசா இடையே புதிய ஒப்பந்தம்!

By SG Balan  |  First Published Jun 22, 2023, 7:30 PM IST

2024ஆம் ஆண்டு முதல் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் நாசாவுடன் இஸ்ரோவும் இணைந்து பணியாற்ற உள்ளன.


விண்வெளி ஆய்வுகளை விரிவுபடுத்தும் இலக்குடன், 2025ஆம் ஆண்டுக்குள் மீண்டும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையில் சேர இந்தியா முடிவு செய்துள்ளது என வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவிலேயே ஜெட் எஞ்ஜின்களைத் தயாரிக்க அமெரிக்காவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டமான ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி 2024ஆம் ஆண்டு முதல் இஸ்ரோ மற்றும் நாசா நிறுவனங்கள் இணைந்து செயல்படும் என்று சொல்லப்படுகிறது.

நாசா, அமெரிக்க வெளியுறவுத் துறையுடன் இணைந்து, 2020ஆம் ஆண்டில் ஏழு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களுடன் ஆர்ட்டெமிஸ் திட்டத்தை நிறுவியது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தில் பல நாடுகளின் ஒத்துழைப்பு மூலம் விண்வெளி ஆய்வுகள் மேம்படுத்தப்படும் என்று நாசா கூறுகிறது.

5 ஸ்டார் ஹோட்டலில் 2 ஆண்டுகள் தங்கிவிட்டு வாடகை கொடுக்காமல் தப்பிய நபர்!

முன்னதாக, ஜெனரல் எலக்ட்ரிக்ஸ் நிறுவனத்தின் ஏரோஸ்பேஸ் பிரிவானது, இந்தியாவில் இந்திய விமானப்படைக்கு போர் ஜெட் என்ஜின்களை தயாரிக்க, இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவித்திருக்கிறது.

வாஷிங்டனில் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவர் ஹெச். லாரன்ஸ் கல்ப் ஜூனியரை பிரதமர் மோடி சந்தித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியானது. மேலும் பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது இந்தியாவும் அமெரிக்காவும் H-1B விசா செயலாக்க மாற்றங்கள் மற்றும் புதிய தூதரகங்களை திறப்பு ஆகியவை பற்றியும் அறிவிப்பு வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மூத்த குடிமக்களுக்கு 50% தள்ளுபடி!

click me!