பெரிய கல்லூரிகளில் படிக்கவில்லை என்றாலும், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் மாணவி ஒருவருக்கு வேலை கிடைத்துள்ளது
பொதுவாகவே ஐஐடி உள்ளிட்ட பெரியபெரிய பொறியியல் கல்லூரிகள், வணிக கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களை மட்டுமே பெரிய நிறுவனங்கள் அதிக அளவில் சம்பளம் கொடுத்து பணிக்கு எடுக்கும். எப்போதாவது அத்தி பூத்தாற் போல், சிறிய கல்வி நிறுவனங்களில் படித்தவர்களும் வாய்ப்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில், ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் லின்கிடின் நிறுவனத்தில் மாணவி ஒருவருக்கு வேலைக்கு கிடைத்துள்ளது.
பொறியியல் பட்டதாரியும், கோடிங் செய்வதில் இந்தியாவின் சிறந்த பெண்ணுமான முஸ்கன் அகர்வாலை, நெட்வொர்க்கிங் தளமான LinkedIn ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு எடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புப் பொறியியலில் இந்த ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றவர் முஸ்கன் அகர்வால். இறுதி GPA மதிப்பெண் 9.40 ஆகும். தனது கல்லூரி வரலாற்றிலேயே மிக உயர்ந்த சம்பளத்துக்கு தேர்வான பெண் என்ற பெருமையை முஸ்கன் அகர்வால் பெற்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டை அடித்து நொறுக்கி விடுவார்கள்: ராஜேஸ்வரி பிரியா எச்சரிக்கை!
கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய கோடிங் போட்டியான TechGig Geek Goddess 2022 இல் கலந்து கொண்ட முஸ்கன் அகர்வால், 69,000 போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்று ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசை தட்டி சென்றார். இதன் மூலம், India's top coder என்ற பெருமையை அவர் பெற்றார்.
தொழில்நுட்பத் துறையில் முஸ்கன் அகர்வாலின் சாதனைகள், LinkedIn நிறுவனத்தில் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராகப் பணியைப் பெறுவதற்கு அவருக்கு உதவியது. பெங்களூருவில் தற்போது வசித்து வரும் அவர், கடந்த ஐந்து மாதங்களாக அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
உனாவில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (IIIT) கடந்த ஆண்டு படித்த மற்றொரு மாணவர் ரூ.47 லட்சம் வருடாந்திர சம்பளத்துக்கு தேர்வானார். மேலும் 2019-23 பேட்ச் மாணவர்களில் சுமார் 86 சதவீதம் பேர், 31 வெவ்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.