மீனவர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை

 
Published : Nov 05, 2016, 01:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:08 AM IST
மீனவர் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்  – நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை

சுருக்கம்

டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில், நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என இந்திய மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்கள், மீன்பிடிக்க செல்லும்போது, நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் மற்றும் ராணுவத்தினரால் அடிக்கடி தாக்கப்படுகின்றனர். அவர்களது படகுகள், வலைகள் சேதப்படுத்தப்படுகிறது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் மத்திய அரசிடம் முறையிட்டனர். 

அதன்படி, இந்தியா - இலங்கை மீனவர்களுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால், அதில் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், இந்தியா - இலங்கை மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் இடையேயான 4ம் கட்ட பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தமிழக மீனவ சங்க பிரதிநிதிகள் 16 பேர், புதுவை பிரதிநிதிகள் 4 பேர் கலந்து கொண்டனர். இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 
இந்த பேச்சுவார்ததை முடிந்து நேற்று முன்தினம் நள்ளிரவு அனைவரும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தனர். அப்போது, விமான நிலையத்தில் அனைவரும், கூட்டாக பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:

மீனவர்களாகிய எங்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, ஏற்படும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தோம். அதன்பேரில் மீனவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையில் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எங்கள் தரப்பில், சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அதில், ஏற்கனவே இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், வலைகள் ஆகியற்றை இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். அதேபோல், கடலுக்குள் 80 கடல் மைல் தூரம் சென்று, மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும். எங்களை இலங்கை ராணுவமோ, கடற்படையோ தேவையில்லாமல் துன்புறுத்த கூடாது. அதோடு, இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என கூறினோம்.

 இதேபோல, இலங்கை மீனவ சங்க நிர்வாகிகளும் சில கோரிக்கைகள் வைத்தனர். இரு நாட்டு அதிகாரிகளும், எங்கள் கோரிக்கைகளை கவனமாக கேட்டுக்கொண்டனர். எங்கள் கோரிக்கைகள் பலவற்றை ஏற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் நல்லெண்ண அடிப்படையில் இரு நாடுகளிலும் சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கவும் இருநாட்டு அரசுகளும் முன் வந்துள்ளன. இந்த பேச்சுவார்த்தை நல்ல தொடக்கம். மேலும், வரும் டிசம்பர் 5ம் தேதி, நடக்கவுள்ள இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும், உயர்மட்ட குழு பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக எங்களுடைய பேச்சுவார்த்தை அமைந்தது. சுமுமாக நடந்தது. நல்லது நடக்கும் என இருக்கிறோம். நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு திரும்பினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

வங்கதேசத்தின் பாதுகாப்புக்கும், செழிப்புக்கும் இந்தியாவுக்கு நன்றியோடு இருங்கள்..! யூனுஷுக்கு ஷேக் ஹசீனா எச்சரிக்கை.!
ஆபரேஷன் சிந்தூரை தடுக்க பாகிஸ்தானுக்கு அல்லாஹ் வந்து உதவினார்..! இந்தியாவை பலவீனமாகக் காட்டும் அசீம் முனீர்..!