டெல்லி செங்கோட்டையில் 74வது குடியரசு தினவிழா தொடக்கம்

By SG BalanFirst Published Jan 26, 2023, 8:02 AM IST
Highlights

டெல்லி செங்கோட்டையில் நடக்கும் 74வது குடியரசு தினவிழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு தேசியகொடியை ஏற்றுகிறார்.

74வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். திரௌவுபதி முர்மு குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்ற பின், முதல் முறையாக குடியரசு தினவிழாவில் கொடியேற்ற உள்ளார்.

8 மணிக்கு தொடங்கும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எகிப்து அதிபர் அல் சிசி ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். குடியரசு தினவிழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் பங்கேற்பது இதுவே முதல்முறை.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். விழாவில் ராணுவ வீரர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவர்களுக்கு விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன.

Republic Day 2023: இந்திய குடியரசு தினம் உருவானது எப்படி? எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

ராணுவ அணிவகுப்பைத் தொடர்ந்து 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகின்றன. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பில் 17 ஊர்திகளும், மத்திய அமைச்சகங்கள் சார்பில் 6 ஊர்திகளும் வலம்வர உள்ளன. இத்துடன் பல்வேறு கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.

அணிவகுப்பு நிகழ்ச்சிகள் காலை 10.30 மணி அளவில் தொடங்கி பகல் 12 மணி அளவில் நிறைவடையும். இதற்கு முன்பாக, பிரதமர் நரேந்திர மோடி தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார். தொடர்ந்து கர்தவ்யா பாத் சாலையில் ராணுவ பலத்தைப் பறைசாற்றும் வகையில் சாகச நிகழ்ச்சியும் நடக்கும்.

குடியரசு தினவிழாவை முன்னிட்டு டெல்லியின் முக்கியப் பகுதிகள் தீவிர கண்காணிப்பின் கீழ் வந்துள்ளன. டெல்லிசெங்கோட்டை, சாந்தி சவுக் உள்ளிட்ட இடங்கள் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

பத்ம விருதுகள்: முலாயம் சிங் யாதவ், சுதா மூர்த்தி, கீரவாணி!.. யார் யாருக்கு விருது? முழு பட்டியல் !!

click me!