Coronavirus: சுனாமி போல் சுழன்று அடிக்கும் கொரோனா.. ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு..!

Published : Jan 06, 2022, 10:53 AM IST
Coronavirus: சுனாமி போல் சுழன்று அடிக்கும் கொரோனா.. ஒரே நாளில் புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு..!

சுருக்கம்

ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்னல் வேகத்தில்தொற்று  பரவுவது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதால் 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,51,09,286 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டம் ஆடியது. இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும், தடுப்பூசி போடும் பணியையும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து இந்தியாவில் கொரோனா பாதிப்பும் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்னல் வேகத்தில்தொற்று  பரவுவது. தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருவதால் 3-வது அலை தொடங்கி விட்டதை காட்டுவதாக சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய நாளை ஒப்பிடுகையில் 56.5% அதிகமாகும். இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,51,09,286ஆக உயர்ந்துள்ளது. 


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 325 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,82,876ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 19,206 பேர் மீண்டுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,43,41,009ஆக உள்ளது. 

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. முதல் இரண்டு அலைகளை போல 3-வது அலையிலும் அதிக பாதிப்பை சந்திக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு புதிய பாதிப்பு 18,466-ல் இருந்து 26,538 ஆக உயர்ந்தது. அம்மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பரவல் வேகம் அதிவேகமாக இருக்கிறது. மும்பையில் பாதிப்பு ஒரே நாளில் 56 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து நேற்று மட்டும் 15,014 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.மேற்கு வங்கத்தில் 14,022 பேருக்கும் டெல்லியில் 10,665 பேருக்கும் நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் நேற்று 4,862 பேருக்கும் கேரளாவில் 4,801, கர்நாடகாவில் 4,246, ஜார்கண்டில் 3,553, குஜராத்தில் 3,350 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,85,401 ஆக உயர்ந்துள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சபரிமலை சன்னிதானத்திற்கு அருகில் திடீர் தீ விபத்து!
ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!