ஆபத்து!! பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைவு… வெளியான அதிர்ச்சி வீடியோ!!

By Narendran SFirst Published Jan 5, 2022, 8:46 PM IST
Highlights

பஞ்சாப்பில் பிரதமர் மோடி சென்ற கார் மறிக்கப்பட்டு பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார். இந்த நிகழ்ச்சிக்காக இன்று காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால், போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் அப்படியே நின்றது.

 

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச் சென்றார். பாதுகாப்பு குறைபாடுகளால் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்வதற்காக இன்று காலை பிரதமர் பதிண்டாவில் தரையிறங்கினார். மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தார்.

 

Another video of PM’s convoy returning back to Bathinda when the route got breached by the protestors pic.twitter.com/M0uQ5h5RRe

— Gagandeep Singh (@Gagan4344)

வானிலை சீரடையாததால், அவர் சாலை வழியாக தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குச் செல்வார் என்று முடிவு செய்யப்பட்டது. அதற்கு 2 மணி நேரத்திற்கும் மேலாகும். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதை பஞ்சாப் போலீஸ் டிஜிபி உறுதிப்படுத்திய பின்னர் அவர் சாலை வழியாக பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்தில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில், பிரதமரின் கான்வாய் மேம்பாலத்தை அடைந்தபோது, சில போராட்டக்காரர்களால் சாலை மறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரதமர் 15-20 நிமிடங்கள் மேம்பாலத்தில் சிக்கிக் கொண்டார்.  இது பிரதமரின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும். பிரதமரின் நிகழ்ச்சி அட்டவணை மற்றும் பயணத் திட்டம் பஞ்சாப் அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது.

 

நடைமுறையின்படி, அவர்கள் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை தயாராக வைத்திருந்திருக்க வேண்டும். மாற்று திட்டத்தையும் தயாராக வைத்திருக்க வேண்டும். மேலும் மாற்று திட்டத்தின்படி, பஞ்சாப் அரசு, சாலை வழியாக எந்தவொரு பயணத்தையும் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பை செய்திருக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை. இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்கு பிறகு, மீண்டும் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பி செல்ல முடிவு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சகம் இந்த கடுமையான பாதுகாப்பு குறைபாடு குறித்து மாநில அரசிடம் இருந்து விரிவான அறிக்கையை கேட்டுள்ளது. இந்த தவறுக்கு மாநில அரசு பொறுப்பேற்று கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுக்குறித்த விடியோ தற்போது வெளியாகியுள்ளது.  

click me!