இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு திடீரென ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,819 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட 2வது கோரத்தாண்டவம் ஆடியது. இதில், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், லட்சக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகள் எடுத்த அதிரடியாக நடவடிக்கை மற்றும் தடுப்பூசி பணிகளை விரைவுப்படுத்தியால் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறைக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு கொரோனாவா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்;-கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 18,819 பேருக்கு கொரோனா பாததிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,52,164ஆக உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 4,495 பேருக்கும், மகாராஷ்டிராவில் 3,957, கர்நாடகாவில் 1,945 , தமிழ்நாட்டில் 1,827, டெல்லியில்1,109, உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இதையும் படிங்க;- எடப்பாடியாருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் சபாநாயகர் தனபால், கடம்பூர் ராஜூ..!
கடந்த 24 மணி நேரத்தில், 13,827 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,28,22,493ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,04,555 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா காரணமாக 39 பேர் மரணமடைந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,116 ஆக உயர்ந்தது. நாடு முழுவதும் நேற்று 14,17,217 டோஸ்களும், இதுவரை 197 கோடியே 61 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 86.23 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- TN Corona: தமிழகத்தை மிரட்டும் கொரோனா… நாளுக்கு நாள் அதிகரிக்கும் தினசரி பாதிப்பு!!