பீகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிக்கு தாவிய 4 எம்.எல்.ஏக்கள்..! அதிர்ச்சியில் ஓவைசி

By Ajmal KhanFirst Published Jun 30, 2022, 9:18 AM IST
Highlights

 பீகார் மாநிலத்தில்  ஓவைசி கட்சியில் இருந்து 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்சி தாவும் எம்எல்ஏக்கள்

அரசியலில் ஒல்வொரு கட்சியாக மாறுவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் தற்போது மஹாராஷ்டிராவில் சிவ் சேனா எம்எல்ஏக்கள் திடீரென அம்மாநில முதலமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதே போல பல்வேறு மாநிலங்களில் எம்எல்ஏக்களின் கட்சி தாவல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது பீகார்  மாநிலத்தில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களில் 4 பேர் நேற்று ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தது தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.பிகாரில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராஷ்டிரீய ஜனாத தளம் 75 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக இருந்தது. அப்போது பாஜகவின் எண்ணிக்கை 74 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டு இருத்தது. 

மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு; சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா?

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!

அதிர்ச்சியில் ஓவைசி

இதனையடுத்து விகாஷீல் இன்சான் கட்சியின் 3  எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்ததால் பாஜகவின் பலம் 77 ஆக அதிகரித்தது. இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து 76 சட்டமன்ற உறுப்பினராக இருந்தது. இந்தநிலையில் அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியில் நேற்று இணைந்துள்ளனர். இதன் காரணமாக தற்போது 80 எம்எல்ஏக்களுடன் தனிபெரும் கட்சியாக ராஷ்டிரீய ஜனதா தளம் உருவெடுத்துள்ளது. இது ,தொடர்பாக கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி பிரசாத் யாதவ், பீகார் மாநிலத்தில் பாஜகவை விட அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சியாக ராஷ்டிரீய ஜனதா தளம் இருப்பதாக தெரிவித்தார்.  அசாதுதீன் ஓவைசியின் ஏ.ஐ.எம்.எம். கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 பேர் ஒரே நேரத்தில் கட்சி மாறியது ஓவைசியை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.

இதையும் படியுங்கள்

ஒரே பாணியில் கவிழ்ந்த கர்நாடகா. மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா அரசுகள்.. 3 எதிர்க்கட்சி அரசுகள் காலியான கதை!

click me!