மகாராஷ்டிரா நம்பிக்கை வாக்கெடுப்பு; சிறையில் இருக்கும் நவாப் மாலிக், அனில் தேஷ்முக் வாக்களிப்பார்களா?

By Dhanalakshmi GFirst Published Jun 29, 2022, 10:50 PM IST
Highlights

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க  மறுத்துவிட்டது. இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முயற்சித்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்க  மறுத்துவிட்டது. இதையடுத்து முதல்வர் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு முயற்சித்து வருகிறது.


மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனா, காங்கிரஸ், தேசிய ஜனநாயக கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்தன. இந்த நிலையில் சிவ சேனா கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 38 பேர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது மொத்தம் 55 எம்.எல்.ஏக்கள் வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தி வந்த சிவ சேனாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா... நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்க்க திட்டமா?

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தனிக்கட்சி துவங்க இருப்பதாக தெரிவித்தனர். காங்கிரஸ் கூட்டணியில் இருந்து உத்தவ் தாக்கரே வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்வதற்கு சட்டசபை துணை சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சென்றனர். தங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்தனர். இந்த நிலையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த சிவ சேனாவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே ராஜினாமா... உத்தவ் தாக்கரே அதிரடி அறிவிப்பு!!

இதையடுத்து இன்று மாலை அமைச்சர்களை உத்தவ் சந்தித்துப் பேசினார். அப்போது தன் மீது ஏதாவது தவறு இருந்தால் மன்னித்து விடுமாறு கேட்டுக் கொண்டார். இதைத் தொடர்ந்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட இருந்த நிலையில், பெரும்பான்மை இழந்த நிலையில் உத்தவ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். நம்பிக்கை வாக்கெடுபில் சிறையில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நவாப் மாலிக், அனில் தேஷ்முக் இருவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் இவர்கள் சட்டசபைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்களிக்க அனுமதியளிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை இவர்கள் அணுகிய நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக சிவ சேனா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

தற்போது ஏக்நாத் தலைமையிலான அதிருப்தி எம்..எல்.ஏக்கள் அசாம் மாநிலத்தில் இருந்து கோவா சென்றடைந்துள்ளனர். இவர்கள் நாளை மும்பை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னவிஸ் பாஜக எம்.எல்.ஏக்களை தாஜ் ஹோட்டலில் சந்தித்து பேசினார். இவர் தலைமையில் ஆட்சி அமையலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிரா அரசியல் பரபரப்பு கடந்த பத்து நாட்களாக நடந்து வருகிறது. இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

click me!